சோசலிசத்துக்கான பாதையில் ஒரு படி முன்னேற்றம் - ஏ. விஜயராகவன்
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் மக்கள் ஜனநாயகத்தின் மூலம் சோசலிசத்தை நிறுவுவதற்கு உறுதிபூண்டுள்ள ஒரு கட்சியாக, சிபிஐ(எம்) எந்த பாசாங்கும் இல்லாமல் அதன் வரலாற்றுப் பணியை நிறைவேற்றி வருகிறது. இது சமூக சமத்துவத்தை உறுதி செய்யும் ஒரு புதிய இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் இந்திய மக்களை ஒன்றிணைப்பது பற்றியது. பன்முகக் கலாச்சார, தேசிய மற்றும் மொழியியல் பன்முகத்தன்மை கொண்ட நமது சமூக அமைப்பில் இது மிகவும் கடினமான பணியாகும். சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் ஆளும் வர்க்கம் தீவிரவாத இந்துத்துவ சக்திகளுக்கு தனது ஆதரவை அளித்திருப்பதால் இந்தப் பணி மேலும் சிக்கலாகிறது. மத தீவிரவாதம் மற்றும் சாதியவாதத்தைப் பயன்படுத்தி மக்களைப் பிளவுபடுத்தவும், பழமைவாத சிந்தனைக்கு இட்டுச் செல்வதன் மூலம் அவர்களின் பொது நனவைப் பின்னோக்கி வழிநடத்தவும், அதை அந்நிய வெறுப்பு நிலைக்கு உயர்த்தவும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் முயற்சி செய்கின்றன.
அரசை கட்டுப்படுத்தும் ஆர்எஸ்எஸ்
பாஜகவை ஆர்எஸ்எஸ் பின்னால் இருந்து கட்டுப்படுத்துகிறது. அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றிய அரசு, பெருநிறுவன லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் கொள்கைகளை விரைவாக செயல்படுத்தி வருகிறது. கல்வி மற்றும் கலாச்சாரத் துறை ஆர்.எஸ்.எஸ்-இன் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது, ஏழை மக்களின் திவால் நிலையும் வாழ்க்கையின் சீரழிவும் அதிகரிக்கிறது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்வு, வேலையின்மை, பணவீக்கம் ஆகியவை ஏழைகளின் வாழ்க்கையை துயரத்திற்குள்ளாக்கியுள்ளன. அதிகரித்து வரும் சிக்கலான வாழ்க்கை நிலைமைகளாலும், அதிகரித்து வரும் வகுப்புவாத வன்முறைகளாலும், இன்றைய நாடு சுதந்திரப் போராட்டத்தின் போது நிறுவப்பட்ட பாதைகளிலிருந்து விலகிச் செல்கிறது. அரசியல் கட்சிகள் தெளிவான நிலைபாட்டை எடுக்க இயலாமை பாஜகவுக்கு மேலும் உதவுகிறது. தொழிலாள வர்க்க அரசியலை நிலைநிறுத்தும் சிபிஐ(எம்), இந்த கடினமான காலங்களில் மக்கள் தப்பிப்பிழைக்க நம்பிக்கையை அளிக்கும் அரசியல் நிலைபாடுகளை ஏற்றுக்கொண்டு, போராட்டங்களுக்கு தலைமை வகித்து வழிநடத்துகிறது.
நெருக்கடியில் உலகமயமாக்கல்
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு ஒருதலைப்பட்சமான சுரண்டலை உறுதி செய்வதற்காக முதலாளித்துவம் வடிவமைத்த உலகமயமாக்கல், இன்று ஒரு பெரிய நெருக்கடியை எதிர்கொள்கிறது. எதிர்ப்பில்லா சுரண்டலை உறுதி செய்வதற்காக மூலதன சக்திகள் எடுத்த நிலைபாடுகள், லாபம் ஈட்டுவதில் கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளன. உலகமயமாக்கல் சக்திகள் தங்கள் லாபத்தை அதிகரிக்க செய்யும் முயற்சிகளைத் தொடர்ந்து போர்களைக் கட்டவிழ்த்துவிட்டு உலகில் மோதல் மண்டலங்களை உருவாக்குகின்றன. பால்கன், இராக், லிபியா மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களிலும், பல ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள உள்நாட்டு மோதல்களிலும் ஏகாதிபத்திய நலன்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஆயுத விற்பனை மூலம் லாபம் ஈட்டுவதற்காக நடத்தப்படும் இத்தகைய தொடர்ச்சியான போர்கள், இஸ்ரேல் நடத்தும் காசா மீதான ஆக்கிரமிப்பை முழு அளவிலான இனப்படுகொலையாக மாற்றும் திறன் இவை அனைத்துக்கும் ஏகாதிபத்திய ஆதரவே காரணமாகும். ரஷ்யா-உக்ரைன் போரிலும் அதே ஏகாதிபத்திய சுரண்டல் ஆர்வம் திரைக்குப் பின்னால் இருந்து செயல்படுகிறது.
அதிகரிக்கும் இடைவெளி
இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது. மேலும் பெரும் பணக்காரர்களிடையே செல்வத்தின் குவிப்பு அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏழைகளின் வாங்கும் சக்தி சரிந்துள்ளது. மேலும் அதிகரிக்கும் பணவீக்கம் தொழிலாளர்களின் ஊதியத்தை ஒரு தசாப்தம் (பத்தாண்டுகள்) பின்னோக்கித் தள்ளியுள்ளது. அனைத்து முதலாளித்துவ நாடுகளின் வளர்ச்சி விகிதம் குறைந்து தேக்கமடைந்துள்ளது. கடுமையான வேலையின்மை ஒரு பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. டொனால்டு டிரம்பின் வெற்றி ஏகாதிபத்தியத்தின் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குகிறது. உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக தளங்களையும் மின்சார உற்பத்தியையும் கட்டுப்படுத்துகிறார், மேலும் அவரது 7,000 செயற்கைக் கோள்கள் பூமியின் சுற்றுப்பாதையைக் கட்டுப்படுத்துகின்றன. அமெரிக்காவின் விண்வெளித் திட்டங்களின் கட்டுப்பாட்டையும் அவர் கைப்பற்றியுள்ளார். இப்போது, இந்த செல்வந்தருக்கு அமெரிக்காவில் அரசு நிர்வாகத்தின் செயல்திறனை அதிகரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது, மேலும் அவர் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்வதன் மூலம் தனது வருகையை அறிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்திலும் லாபம்
மத வெறியால் ஏற்படும் ஆபத்து, மக்கள் விரோத அமைப்பாக மாறுவதற்கான அறிகுறிகளை நாம் தொடர்ந்து காண்கிறோம். காலநிலை மாற்றத்தின் விளைவுகளைப் பற்றி ஏகாதிபத்தியம் சிந்திக்கவில்லை. மாறாக துருவப் பகுதிகளில் உருகும் பனிக்கட்டிகளால் கிடைக்கும் கனிமங்கள் மற்றும் பெட்ரோலியத்தைப் பற்றி சிந்திக்கிறது. மனிதகுலத்தின் விடுதலைக்கும் உயிர் வாழ்விற்கும் இடதுசாரி அரசியல் வலுப்பெற வேண்டும் என்பதை இந்த விசயங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன. இந்திய ஆட்சி நிர்வாகத் துறையைக் கட்டுப்படுத்தும் பெரும் பணக்காரர்களும், கூட்டுக்களவாணி முதலாளிகளும் அரசின் வருமானத்தில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமாகக் கைப்பற்றுகிறார்கள். நாட்டின் 22 சதவிகிதத்திற்கும் அதிகமான செல்வம் ஒரு சதவிகித பணக்காரர்களிடம் உள்ளது. அம்பானி, அதானி, டாடா இன்று உலக முதலாளிகளாக வளர்ந்து வருகின்றனர். இது அவர்களின் சிறப்பு அல்ல. பாஜக அரசாங்கம் வழங்கும் ஆதரவுதான் அவர்களின் லாப வெறிக்கு அடித்தளம். ஏழைகளின் வாழ்க்கை சீரழிவின் ஆழம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற சமூக நல நடவடிக்கைகளிலிருந்து அரசாங்கம் பின்வாங்கிக் கொண்டே இருக்கிறது.
வலுவான போர் முனை
சிறு விவசாயிகள் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். தொழிலாளர் நலச் சட்டங்கள் மறைந்து வருகின்றன. மதச் சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. சமூக சமத்துவத்திலிருந்து தங்களை தொலைவில் விலக்கிக் கொள்வது மட்டுமல்லாமல், சாதாரண மக்களை மேலும் ஓரங்கட்டி, முதலாளித்துவ மயமாக்கும் பெருநிறுவன-வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுகின்றன. இதை நாம் உணர்ந்து, அதற்கு எதிரான வலுவான போர் முனையை திறக்க வேண்டும். அண்மையில் அமெரிக்காவிலிருந்து வந்த செய்திகள், கோடீஸ்வரர் எலான் மஸ்க்கின் கார் விற்பனை சங்கிலிக்கு எதிராக பொதுமக்களின் கோபம் அதிகரித்து வருவதாகக் கூறின. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள டெஸ்லா ஷோரூம்களுக்கு முன்னால் மக்கள் மறியல் போராட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர். சீன மின்சார வாகனங்கள், பிஒய்டி, ஏஐ தொழில்நுட்பத் துறையில் டீப் ஷீக் ஆகியவை ஏற்படுத்தும் அதிர்வுகளும் குறிப்பிடத்தக்கவை. தொழிலாளர்களின் வெற்றி முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி ஆழமடைகையில், வேலைக்கும் ஊதியத்துக்குமான போராட்டங்கள் தீவிரமடைவது உறுதி. இந்தியாவில், சிபிஐ(எம்) தலைமையிலான தொழிலாளர் இயக்கங்களின் தலைமையில் தொடர்ச்சியான தொழிலாளர் போராட்டங்கள் வலுவாகத் தொடர்கின்றன. தனியார் மயமாக்கலுக்கு எதிரான போராட்டங்களுடன், சாம்சங் தொழிலாளர்கள் தங்கள் உரிமையை நிலைநாட்ட நடத்திய போராட்டமும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. விவசாயத் துறையில் சிறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பிற கிராமப்புறத் தொழிலாளர்கள் மேலும் போர்க்குணம் மிக்கவர்களாக மாறுவதை நாம் காண்கிறோம். கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசின் சாதனைகளும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் உலக கவனத்தை ஈர்த்து வருகின்றன. சுகாதாரம், கல்வித் துறைகளில் கேரளம் உலகத் தரம் வாய்ந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. மக்களுக்கு சமூக ரீதியாக சமமான வாழ்க்கையை உறுதி செய்த பினராயி விஜயன் அரசாங்கம், கேரளாவை தீவிர வறுமை இல்லாத இந்தியாவின் ஒரே மாநிலமாகவும் மாற்றியது. முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்பில் கம்யூனிஸ்டுகள் தலையிடுவதன் மூலம், வளர்ந்த நடுத்தர முதலாளித்துவ நாடுகளின் வாழ்க்கைத் தரத்திற்கு இணையாக கேரளாவின் வாழ்க்கைத் தரத்தை கொண்டுவரவும், கேரளம் அடைந்துள்ள சாதனைகளை தரமான முறையில் பராமரிக்கவும் முன்னேற்றவும் முடிகிறது.
சமூக மாற்றுத்துக்கான இலக்கு
நவ-பாசிச நிர்வாகத்திற்கு எதிராக இந்திய மக்களை வழிநடத்தும் திறன் கொண்ட ஒரு அரசியல் இயக்கமாக சிபிஐ (எம்) மாறுவது இன்றைய இந்திய சூழலில் அவசியம். இதில் கட்சியின் சுய திறனை அதிகரிப்பது ஒரு முக்கிய காரணியாகும். முதலாளித்துவ அரசியல் கட்சிகள் ஏற்ற இறக்கங்களுடன் உள்ளன. இந்துத்துவா வகுப்புவாதம் ஒவ்வொரு துறையிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வலதுசாரி தீவிர தேசியவாதம் மற்றும் நவீன தாராளமயத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அரசியல் கட்டமைப்பால் வாழ்க்கை சரிவை எதிர்கொள்கிறது. அதை உடைக்கும் சோசலிச இலக்கை சிபிஐ(எம்)ஆல் நிலைநிறுத்த முடியும். ஒவ்வொரு பிரச்சனையையும் எச்சரிக்கையுடன் கையாள முடியும். பிரச்சனை சார்ந்த போராட்ட முனைகளைத் திறக்கும் அதே வேளையில், சமூக மாற்றத்தின் அடிப்படை இலக்கையும் போராட்டத்துடன் இணைக்க முடியும். மதுரையில் நடைபெறும் 24ஆவது தேசிய மாநாட்டில் நடைபெறும் விவாதங்களும் முடிவுகளும், இந்தத் திசையில் விரைவான மக்கள் இயக்கத்திற்கு வழி வகுக்கும்.