திருச்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
திருச்சியில் 1,97,337 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் நூலகக் கட்டடம் ரூ.235 கோடி மதிப்பீட்டிலும், புத்தகங்கள் மற்றும் இ-புத்தகங்கள் ரூ.50 கோடி மதிப்பீட்டிலும், தொழில்நுட்ப சாதனங்கள் ரூ.5 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.290 கோடி மதிப்பீட்டில் உலகத்தரத்துடன் அமைக்கப்படவுள்ள மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மாதம் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்த நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.