சிபிஎம் அகில இந்திய மாநாட்டில் மனதை கவர்ந்த கலைநிகழ்வுகள்...!
சிபிஐ(எம்) அகில இந்திய மாநாட்டு வளாகத்தில் மக்களின் மனதை கவரும் வகையில் திண்டுக்கல் சக்தி கலைக் குழு, பாப்பம்பாடி ஜமா கலைக் குழு, கரிசல்குயில் கிருஷ்ணசாமி தலைமையிலான இயக்கப் பாடகர்கள், சென்னை கேங்ஸ்டா குழுவினரின் இசைநிகழ்ச்சி, கட்டைக்கால் குழுவினரின் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடந்தேறின.