புதுதில்லி,ஏப்.03- வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது.
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நேற்று நள்ளிரவு 2 மணிக்கு மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதா மீதான 12 மணிநேர விவாதத்திற்குப் பிறகு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர்.
வக்பு சொத்துக்களை அபகரிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டியுள்ளனர். மேலும் இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு பதியப்படும் என் சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வக்பு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக கூட்டணிக் கட்சிகள் சட்டமன்றத்திற்கு கருத்து பட்டை அணிந்து வந்தனர்