tamilnadu

img

மதுரை ஆதீனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த மதுரை ஆதீனத்திற்கு எதிராக காவல்துறை தாக்கல் செய்த மனு மீது ஜூலை 30ஆம் தேதிக்குள் பதில் அளிக்க மதுரை ஆதீனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளது என்றும் இதில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும், தன் கார் மீது மோதிய காரில் வந்தவர்கள் குல்லா அணிந்தனர், தாடி வைத்திருந்தனர் எனவும் நிகழ்வு ஒன்றில் கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இதை தொடர்ந்து, மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணைக்கு மதுரை ஆதீனம் ஒத்துழைக்க மறுப்பதால், அவரது முன் ஜாமீனை ரத்து செய்ய கோரி காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து, இம்மனு மீது ஜூலை 30ஆம் தேதிக்குள் பதில் அளிக்க மதுரை ஆதீனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.