மாமேதை காரல் மார்க்ஸ்க்கு சென்னையில் சிலை நிறுவப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இது குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "வரலாற்றில் பலரும் பிறக்கிறார்கள்; பலர் வரலாற்றுக்குத் தொண்டாற்றி இருக்கிறார்கள். ஆனால், வரலாற்றின் போக்கினையே மாற்றி அமைத்தவர்கள் சிலர் தான். அந்த ஒரு சிலரில் தலைமகனாகப் போற்றப்படுபவர் கார்ல் மார்க்ஸ்.
உலக மாமேதை காரல் மார்க்ஸ்-ஐ பெருமைப்படுத்திட, போற்றிட இந்த அரசு விரும்புகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொழிற்சங்க இயக்கம் கோலோச்சிய இந்த சென்னை மாநகரில் அந்த மாமேதையின் சிலை அமைவது பொருத்தமானது என்று நான் கருதுகிறேன்!" என்று தெரிவித்தார்.