மூடிக்கிடக்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை திறந்து செயல்படுத்துக!
சட்டமன்றத்தில் நாகை மாலி வலியுறுத்தல்
தமிழகத்தில் மூடிக்கிடக்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை திறந்து செயல்படுத்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் நாகை மாலி எம்எல்ஏ வலியுறுத்தினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை-உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம்-மீனவர் நலன், பால்வளம் ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது விவா தம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டமன்ற குழுத் தலைவர் நாகை மாலி பேசினார். கரும்பு மற்றும் நெல்லுக்கு விலை உயர்த்தி கொடுத்தமைக்கு நன்றி. நெல்லுக்கு தற்போது குவி ண்டாலுக்கு ரூ. 2430 தரப்படுகிறது. தேர்தல் வாக்குறுதியில் ரூ.2500 கொடுப்பதாக அறிவித்தோம். 70 ரூபாயை அதிகரித்துக் கொடுத்தால் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றிய பெருமை அரசுக்கும் முதலமைச்சர் மற்றும் வேளாண்மை அமைச்சரை யும் சேரும். அரசுக்கு கரும்பு விவசாயிகள் நன்றி கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் உள்ளது. தற்போது ரூ. 3500 என்ற அளவிலேயே விலை அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் மாநில அரசு 8,048 கோடி ரூபாயை ஊக்கத் தொகை யாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்கியிருக்கிறது. இதற்கு கரும்பு விவசாயிகள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பள வும், சர்க்கரை உற்பத்தியும் 10 ஆண்டுகளில் படிப்படியாக குறைந் துள்ளது. 23 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்ட நமது மாநி லத்தில் தற்போது 5 லட்சம் டன்னாக சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளது. 8 லட்சம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில் நடப்பு பருவத்தில் 2.25 லட்சம் ஏக்கராக மிகவும் குறைந்துளளது என்பதை யும் அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். காரணம், நமது வேளாண்மை அமைச்சர் ஒரு உண்மையான விவசாயி ஆவார். கரும்புக்கான உற்பத்தி செலவு அதி கரித்துள்ளதும், கரும்புக்கு கூடுதல் விலையை ஒன்றிய அரசாங்கம் வழங் ்காததும்தான் இதற்கு காரணம். தஞ்சை மாவட்டம், திருமண்டங் குடி சர்க்கரை ஆலையில் நிர்வாகத் திற்கும், விவசாயிகளுக்கும் ஏற்பட்ட பிரச்சனையை களைந்து அந்த ஆலை இயங்குவதற்கு உதவி செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்ச ருக்கும் வேளாண்மைத்துறை அமை ச்சருக்கும், உதவி செய்த தமிழக முதல்வருக்கும் கரும்பு விவசாயி கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் மூடிக்கிடக்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை திறந்து செயல்படுத்துவோம் என அறிவித்தீர்கள். குறிப்பாக, மதுரை மாவட்டம், அலங்காநல்லூர். தென் மாவட்டங்களில் உள்ள ஒரே கூட்டு றவு ஆலையான அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை யையும், தலைஞாயிறு என்.பி.கே.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையையும், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையையும் செயல் படுத்த வேண்டும். திருத்தணி கூட்டு றவு சர்க்கரை ஆலையை புதுப்பித்து மேம்படுத்த வேண்டும். கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை களை புதுப்பித்து மேம்படுத்த வேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் தேவையான தொழி லாளர்கள், அதிகாரிகளை பணியில் அமர்த்த வேண்டும். தமிழகத்தில் அதிக தூரம் ஓடும் காவிரி நதிகள் மனித குலத்திற்கு சொந்த மானது. அனைவருக்கும் பொதுவா னது. நமக்கும், கர்நாடகத்திற்கும் ஏற்பட்டுள்ள நதிநீர் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. நதிநீர் பிரச்சனையை எப்படி தீர்த்துக் கொள்வது என்கிற சர்வதேச நதிநீர் கொள்கை மூன்று விஷயங்களை குறிப்பிடுகிறது. 1. நதியின் பாரம் பரிய பயன்பாடு, 2. நதியின் பாசனப் பரப்பு, 3. பாய்ந்தோடும் நதியின் நீளம் ஆகும். நதியின் பாரம்பரிய பயன்பாட்டில் கல்லணையைக் கட்டி இரண்டாம் நூற்றாண்டிலேயே பாசன முறைகளை கண்டவர்கள் நாம். நதியின் பாசனப் பரப்பு என்ற முறையில் தமிழ்நாட்டின் நிலப் பரப்பு அதிகம். பாய்ந்தோடும் நதி யின் நீளம் என்ற முறையிலும் காவிரி ஆறு தமிழ்நாட்டில் தான் அதிக நீளம் ஓடுகிறது. காவிரியின் மொத்த நீளம் 800 கி.மீ. கர்நாடகத்தில் 310 கி.மீ. ஓடுகிறது. தமிழ்நாட்டில் 416 கி.மீ. ஓடுகிறது. இதில் தமிழ்நாட்டின் உரிமை 57 சதவீதம். கர்நாடகத்தின் உரிமை 43 சதவீதம். கர்நாடக அரசு நடுவர் மன்ற தீர்ப்பையும் ஏற்க மறு க்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பையும் ஏற்க மறுக்கிறது. ஒன்றிய அரசு இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காவிரி தண்ணீர் பிரச்சனையால் தமிழ்நாட்டிற்கு உணவளிக்கும் டெல்டா மாவட்டம் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அர சின் நடவடிக்கைகளை சட்டப்பூர்வ மாக எதிர்கொள்வது நமது கடமை. ஒருபோதும் இதை நாம் அனுமதிக்க க்கூடாது. கர்நாடக அரசின் நட வடிக்கைகளை நாம் முறியடித்து தமி ழகத்தின் உரிமையையும், நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பையும் பாதுகாக்க உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
சத்துணவு-ஊட்டச்சத்து மையங்களில் பால் பொருட்களை பயன்படுத்துக
பால் பொருட்களை, சத்துணவு மற்றும் ஊட்டச்சத்து மையங்களில் பயன்படுத்த வேண்டும் என்று நாகை மாலி வலியுறுத்தினார். மேலும் அவர் பேசுகையில், உலக அளவில் கறிக்கோழி உற்பத்தியில் இந்தியா 5வது இடம் பிடித்துள்ளது. இந்திய அளவில் கறிக்கோழி உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது இடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன. கோழி வளர்ப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஒரு கிலோவிற்கு கம்பெனிகள் இப்போது கிடைக்கும் கூலி ரூ. 6.50 மட்டுமே. கோழி வளர்ப்புக்கான பொருட்கள் மிகப்பெரிய அளவில் உயர்ந்து விட்டால் தற்போதுள்ள சூழலுக்கேற்ப கறிக்கோழி வளர்ப்பு கூலியை கிலோவுக்கு ரூ. 20 ஆக உயர்த்தி வழங்கினால் தான் இத்தொழிலில் ஈடுபடும் விவ சாயிகளை பாதுகாக்க முடியும் என்றார்.