சிந்தாதரிப்பேட்டையில் கருத்தரங்கம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24வது மாநாட்டு கருத்தரங்கம் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் சிந்தாதரிப்பேட்டையில் நடைபெற்றது. இதில், ‘மார்க்சிய பார்வையில் நகரமயமாக்கல்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.முரளி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ‘மாநகரத்தை மீட்டெடுத்தல்’ எனும் தலைப்பிலான ஆங்கில நூலை மத்தியக் குழு உறுப்பினர் அருண்குமார் வெளியிட, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.முருகன் மற்றும் ஆ.பிரியதர்ஷினி எம்சி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மாணவர் அரங்க மாவட்டச் செயலாளர் கு.தமிழ், வாலிபர் அரங்க மாவட்டத் தலைவர் ஜெ.பார்த்திபன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
சிபிஎம் மாநாட்டு நிதியளிப்பு கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு கூட்டம் செவ்வாயன்று (ஏப்.2) தி நகர் பகுதி 133 வது வட்ட ஆட்டோ கிளை சார்பில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் பி.சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.செந்தில் குமாரிடம் ரூ.50ஆயிரம் நிதி அளிக்கப்பட்டது. பகுதிச் செயலாளர் எம்.குமார் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.