வேளாண் விளைபொருட்கள் சந்தைக் குழு வரைவுத் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுக!
ஒன்றிய அரசின் விவசாயிகளுக்கு விரோதமான
சந்தை, மண்டிகள் ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் என்ற பெயரால் ஒன்றிய அரசு வேளாண் விளைபொருட் கள் சந்தைக் குழு என்கிற வரைவுத் திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. விவசாயிகளுக்கு விரோதமான இந்த வரைவு திட்டத்தை எதிர்த்தும், கைவிட வலியுறுத்தியும் இந்த அவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலை வர் நாகை மாலி வலியுறுத்தினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலன், பால்வளம் ஆகிய மானியக் கோரிக்கை கள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நாகை மாலி பேசியது வருமாறு: விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் அனைத்து கடன் களையும் ஒருமுறை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் மற்றும் விவ சாயத் தொழிலாளர்களின் கடன்களை பற்றி கவலைப்படாத ஒன்றிய அர சாங்கம் கார்ப்பரேட்டுகளின் ரூ. 14 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது என்பதை அமைச்சரின் கவனத்திற்கு நான் கொண்டு வருகிறேன். சந்தை, மண்டிகளை ஒருங்கி ணைந்த சந்தைப்படுத்தல் என்ற பெய ரால் ஒன்றிய அரசு வேளாண் விளை பொருட்கள் சந்தைக் குழு என்கிற வரை வுத் திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. விவசாயிகளுக்கு விரோதமான இந்த வரைவு திட்டத்தை எதிர்த்தும், கைவிட வலியுறுத்தியும் இந்த அவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டுகிறேன்.
கண்துடைப்புக்காக ஒன்றிய குழு ஆய்வு
விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தை தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு வழங்காமல் அரசே ஏற்று நடத்தலாம். தனியார் நிறுவனங்கள் பயிர் கணக்கெடுப்பில் குளறுபடி கள் செய்வதாகவும், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டுத் தொகை கிடைப்பதில்லை என்றும் விவசாயிகள் வேதனைப்படு கின்றனர். தமிழகத்தில் மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்குவதில் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகமிழைத்து வருகிறது. கணக் கெடுப்பும் கூட சரியாக செய்யவில்லை. இதுபோன்ற தருணங்களில் ஒன்றிய அரசின் குழு என்ற பெயரில் வருவதும், போவதுமான ஒரு சடங்கு நிகழ்வாகவே இருக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு எந்த உதவியும் இல்லை. இதுபோன்ற இயற்கை பாதிப்பிற்கு தமிழக அரசு கோரும் நிதியினை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும். விவசாயிகளின் நெல்லுக்கு நேரடி கொள்முதல் நிலையங்களில் ஈரப்ப தம் 22 சதவீமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற விவசாயிகளுடைய நீண்ட நாள் கோரிக்கையை ஒன்றிய அரசு கண்டுகொள்வதில்லை. தமிழக முதல்வர் ஒன்றிய அரசுக்கு இதுகுறித்து அழுத்தம் கொடுத்தும் வழக்கம் போல் தமிழக நலனுக்கு விரோதமாகவே நடந்து கொள்கிறது. இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப்படும் விவசாயிகளின் விளை நிலங்களுக்கு தமிழக அரசு அறி விக்கும் நிவாரணத் தொகை மிகவும் குறைவாக இருக்கிறது. பல ஆண்டு களுக்கு முன்பு நிர்ணயம் செய்யப்பட்ட தொகை இது. இனிவரும் காலங்களில் பாதிப்புக்கு உரிய நிவாரணம் உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை
வரம்பற்ற முறையில் விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் நபர்களால் மனைகளாக, குடியிருப்புகளாக மாற்றப்படுகிறது. இதை தடுத்து நிறுத்தி டவும், விவசாய நிலங்கள் அனைத்தும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகை யில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கிராமப்புறங் களில் உள்ள இளைஞர்கள் விவசாயப் பணிகளில் இருந்து வெளியேறி முறைசாரா தொழிலாளர்கள் மாறு கின்றனர். இதற்கு பிரதான காரணம் விவசாயம் லாபகரமான தொழில் அல்ல மற்றும் பாதுகாப்பற்ற தொழில் அல்ல என நினைக்கின்றனர். எனவே, விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கு விவசாயிகளின் விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்குவதற்கு எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைகள் அமலாக்க வேண்டும்.
ரேசன் கடைகளில் ஜவ்வரிசி
சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி கடந்த ஆண்டுகளை விட குறைந்து விட்டது. கடந்த ஆண்டுகளில் டன் ஒன்று 16,000 ரூபாய் விற்ற மரவள்ளிக் கிழங்கு தற்போது ஒரு டன் ரூ. 4000 முதல் ரூ. 5000 வரை தான் விவசாயிகளுக்கு விலை கிடைக்கிறது. ஆகவே மரவள்ளிக்கிழங்கு சாகுபடிகள் செய்த விவசாயிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாயின்ட் ஒன்றுக்கு ரூ. 300 அளிக்க வேண்டும். முத்தரப்பு கமிட்டி அமைத்து அதன் விலையை முறைப்படுத்த வேண்டும். ரேசன் கடைகளில் ஜவ்வரிசி விற்பனையை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.