சென்னை,ஏப்.01- டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது
துணை ஆட்சியர், டிஎஸ்பி, கூட்டுறவுச் சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது.
குரூப் 1,1A தேர்வுகளுக்கு இன்று முதல் ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் விண்ணப்பங்களில் மே 5 ஆம் தேதி முதல் மே 7 ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 15ஆம் தேதி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.