பஞ்சாப்,ஏப்.01- பஞ்சாப்பில் உள்ள பிரபல மத போதகருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபில் பிரபலமான கிறிஸ்துவ மத போதகரான பஜிந்தர் சிங்கிற்கு 2018ஆம் ஆண்டு வெளிநாடு அழைத்துச் செல்வதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து மொஹாலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் 2000ஆம் ஆண்டு இவர் கொலை வழக்கு ஒன்றில் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.