திருவாரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24 ஆவது மாநாட்டு பிரச்சாரம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24 ஆவது மாநாட்டு பிரச்சார இயக்கம், கடந்த இரு தினங்களாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக குடவாசல், வலங்கைமான், திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை ஆகிய ஒன்றியங்களில் செவ்வாய்க்கிழமை வாகன பிரச்சார இயக்கம் நடைபெற்றது. குடவாசல் தெற்கு ஒன்றியத்தில் நடைபெற்ற வாகனப் பிரச்சாரத்திற்கு ஒன்றியச் செயலாளர் டி.லெனின் தலைமை வகித்தார். குடவாசல் நகர பகுதியில் நடைபெற்ற பிரச்சார குழுவிற்கு, நகரச் செயலாளர் டி.ஜி.சேகர் தலைமை வகித்தார். பிரச்சாரத்தில் பங்கேற்ற சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் மாநாட்டின் நோக்கத்தை விளக்கி சிறப்புரையாற்றினார். குடவாசல் ஒன்றிய பகுதியில் 15 இடங்களிலும், நகர பகுதியில் 5 இடங்களிலும் பிரச்சாரம் நடைபெற்றது. அகிலம் போற்றும் மதுரை மாநாட்டு பிரச்சார செய்தியை பொதுமக்கள் ஆர்வத்துடன் நின்று கேட்டனர். இதேபோல், வலங்கைமான் ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் டி.சண்முகம் தலைமையில் வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. கந்தசாமி, என். இராதா ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். முத்துப்பேட்டையில் நடைபெற்ற பிரச்சாரக் குழுவிற்கு மாவட்டகுழு உறுப்பினர் சி.செல்லத்துரை தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. ஜோதிபாசு கலந்து கொண்டு மாநாடு சிறப்புகளை விளக்கி உரையாற்றினார். திருத்துறைப்பூண்டி திருத்துறைப்பூண்டி நகரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் குழுவிற்கு நகரச் செயலாளர் கே. கோபு தலைமை விகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். சாமிநாதன், திருத்துறைப்பூண்டி நகர்மன்றத் துணைத் தலைவர் எம். ஜெயபிரகாஷ் மற்றும் நகரக் குழு உறுப்பினர்கள் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியத்தில், திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.வி. காரல்மார்க்ஸ் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். பவானி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.