உ.பி, முன்னாள் முதல்வர் அகிலேஷ்
வக்பு திருத்த மசோதாவை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம், பாஜக அனைத்து விஷயங்களிலும் தலையிட விரும்புகிறது. எல்லா இடங்களையும் அவர்கள் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். அது ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு அல்லது வேறு எந்த முடிவாக இருந்தாலும் சரி,பாஜக மக்களிடமிருந்து ஏதாவது ஒன்றைப் பறிக்கவே விரும்புகின்றது.
காங்கிரஸ் பொதுச் செயலளார் ஜெய்ராம் ரமேஷ்
வக்பு சட்டத்திருத்த மசோதா அரசியல் சாசனம் மற்றும் அதன் அடித்தளத்தின் மீதான நேரடித் தாக்குதல். எல்லா எதிர்க்கட்சிகளும் இந்த சட்ட மசோதாவை எதிர்க்கின்றன. ஆனால் மதச்சார்பற்ற கட்சிகளான ஜேடி(யு) மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் என்ன நடவடிக்கை எடுத்தன என்பதுதான் கேள்வி.
ஆம் ஆத்மி எம்எல்ஏ அனில் ஜா
தில்லியில் பாஜக ஆட்சி அமைத்து 1.5 மாதங்கள் ஆகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை தில்லியில் மின்வெட்டு என்ற பிரச்சனையே இல்லை. ஆனால் இப்போது பல பகுதிகளில் மின் வெட்டு வருகின்றது. மின்வெட்டு காரணமாக இன்வெர்ட்டர்களின் விற்பனை அதிகரிக்கும் வகையில், இன்வெர்ட்டர் நிறுவனங்களுடன் ஏதோ ஒரு ஒப்பந்தம் வைத்திருப்பதாக நாங்கள் சந்தேகிக்கின்றோம்.
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி
பாஜக கூட்டணியில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரத்தையே விரும்புகிறார்கள். அவர்களுக்கு கொள்கை இல்லை. மறைந்த ராம்விலாஸ் பஸ்வான் கோத்ரா சம்பவத்திற்காக ராஜினாமா செய்தார். ஆனால் இன்று இவர்கள் அதிகாரத்தை மட்டுமே விரும்புகிறார்கள்.