tamilnadu

img

10 திட்டப்பணிகளை நிறைவேற்றிய முதல்வருக்கு நாகை மாலி எம்எல்ஏ நன்றி

10 திட்டப்பணிகளை நிறைவேற்றிய  முதல்வருக்கு நாகை மாலி எம்எல்ஏ நன்றி 

கீழ்வேளூர் தொகுதியில் 10 திட்டப்பணிகளையும் நிறைவேற்றிக் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாகை மாலி எம்எல்ஏ சட்டமன்றத்தில் நன்றி தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை-உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம்-மீனவர் நலன், பால்வளம் ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டமன்ற குழுத் தலைவர் நாகை மாலி பேசினார். அவர் பேசுகையில் ‘உங்கள் தொகுதியில் முதல்வன்’என்கிற மகத்தான திட்டத்தில் எனது தொகுதிக்கு நான் கொடுத்த பத்து பணிகளையும் ஏற்றுக்கொண்டதன். அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்திருக்கும் முதல்வருக்கு எனது சார்பில் கீழ்வேளூர் தொகுதி மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கீழ்வேளூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஒரு வேளாண்மை கல்லூரி வேண்டும் என்பதாகும். கடந்த கால ஆட்சியாளர்களால் கிடப்பில் போடப்பட்டது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்து கீழ்வேளூர் அரசு வேளாண்மைக் கல்லூரியையும் அமைத்துக் கொடுத்த முதலமைச்சர், அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன்,அந்த கல்லூரிக்கு சொந்த கட்டடம் விரைவில் கட்டிக்கொடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று தெரிவித்தார்.\

அடிப்படை வசதிகள் கோரி சிபிஎம் மனு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரப்பட்டி கிளையின் சார்பில் தான்தோன்றிமலையில் உள்ள தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ராயனூர் மின் வாரிய அலுவலகத்திலும் கொடுக்கப்பட்ட மனுவில், கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூக்கணாங்குறிச்சி ஊராட்சியில் உள்ள வரபட்டி கிராமத்தில் இந்திரா காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இன்றி பல ஆண்டுகளாக மிகவும் சிறமத்தை அனுபவித்து வருகின்றனர்.  இந்நிரா நகரில் தெரு சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. அனைத்து தெருவிற்கும் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும். தெருவில் உள்ள மின் விளக்குகள் எரியாமல் ஊரே இருளாக உள்ளது. இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் பெரும் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூடை அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவில் தெரிவித்து இருந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்காட்டுப்புதூர் கிளைச் செயலாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ராயனூர் கணேசன், வரப்பட்டி கிளைச் செயலாளர் ப. தண்டபாணி, ஆர். ராஜேந்திர பிரசாத், கோகிலா, பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.