facebook-round

img

எங்கெங்கும் மார்க்ஸ்!

"மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டுப் பணிகளைத் துவக்கும் போது மாநாட்டுக்கான கலைப்படைப்புகள் அனைத்திலும் மார்க்ஸை மையப்படுத்தி அமைப்பது என்று முடிவு செய்தோம்.
அதனடிப்படையில் சிற்பக் கலைஞர் சரண்ராஜ் அவர்களின் இரண்டு மாதகால உழைப்பில் உருவான கார்ல்மார்க்ஸின் முழுவடிவ சிலையை மாநாட்டு முகப்பிலே அமைத்தோம்.
முதன்மை நுழைவாயிலில் யானைமலையின் மீது மார்ஸின் சிற்பம். மாநாட்டு அரங்க மேடையில் மார்க்ஸின் சிற்பம், கலைநிகழ்வு மேடையில் மார்க்ஸின் சிற்பம் என கலை இயக்குநர் பிரபாகரனின் கை வண்ணத்தில் உருவாக்கினோம். மாமதுரை எங்கும் மார்க்ஸ் ஒளிர்ந்து கொண்டிருந்தார்.
இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொள்ள இன்று மதுரை வருகை தரவுள்ள தமிழக முதல்வர் சென்னையில் மாமேதை மார்க்ஸுக்கு சிலை அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். பெரு மகிழ்வும் நன்றியும் முதல்வர் அவர்களே! "
- சு.வெங்கடேசன் எம்.பி சமூக வலைதளப் பதிவு