சுவாமி...
நாம் கந்தர் மலை என
கொண்டாடுவதை அவர்கள்
சிக்கந்தர் மலை என சொல்றாங்க
அதை ஏத்துக்க முடியுமா..? எனும்
முருக பக்தர்களின் கேள்விக்கு
நாம் கந்தன்னு சொல்லுறோம்
அவங்க கந்தனுக்கு சி.கந்தன்னு
இனிஷியலோடு சொல்றாங்க..
முருகனுக்கு அப்பா யாரு..?
சிவபெருமான் தானே, அப்போ
அவரோட இனிஷியல் 'சி' தானே
விடுங்க, கடவுள் வழிபாட்டில்
சச்சரவு எதுக்குன்னு கேட்டவர்
திருமுருக கிருபானந்த வாரியார்..
நம்பிக்கையாளர்களிடையே
நல்லிணக்கத்தை போற்றும்
அவரின் மொழியோ ஆன்மீகம்..
ஆனால், பக்தியை வெறுப்பாக
மாற்றி கலவரத்தை தூண்டுவோர்
ஆபத்தான மதவெறியர்களே..
- ஆர்.பத்ரி, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர்