பல்லடம் வட்டாரத்தில் பொதுவுடமை இயக்கத்தை வளர்த்த தோழர்கள்
ப.கு.சத்தியமூர்த்தி:
மாணவர் பருவத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர். 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர் தலில் கோவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக தோழர் கே.ரமணி போட்டி யிட்டபோது தேர்தல் பணியாற்றினார். மார்க் சிஸ்ட் கட்சி உறுப்பினராக சேர்ந்தவர். சோச லிஸ்ட் வாலிபர் முன்னணியில் மாவட்ட நிர் வாகியாக செயல்பட்டார். நேர்மையான அர்ப்பணிப்பு மிக்க பணி யின் மூலம் கட்சியின் ஒன்றுபட்ட கோவை மாவட்டக்குழு உறுப்பினராகவும், பல்லடம், சூலூர் சுல்தான்பேட்டை உள்ளடக்கிய ஒன்று பட்ட பல்லடம் தாலுகா செயலாளராக, பின்னர் திருப்பூர் மாவட்டக்குழு உறுப்பினராக, மாவட்ட செயற்குழு உறுப்பினராக நீண்ட காலம் பணி யாற்றினார். அவசரநிலை காலத்தில் சிறை யில் இருந்தார். பீடி தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகியாக செயல்பட்டார். கிராமப்புற விவ சாயிகள், விசைத்தறி தொழிலாளர்கள் உள் ளிட்ட சாமானிய ஏழை எளிய மக்களின் பிரச் சனைகளை தீர்ப்பதற்கு களப்பணி ஆற்றினார். பல்லடம் பேரூராட்சி மன்ற உறுப்பினராகவும், நகர்மன்ற உறுப்பினராகவும் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றினார். பல்லடத்தில் மார்க் சிஸ்ட் கட்சியின் அடையாளமாக உயர்ந்தார். ஏ.ஜி.துரைசாமி (வா.அய்யம்பாளையம்): 1982 முதல் 2020இல் மரணமடையும் வரை 38 ஆண்டு காலம் மார்க்சிஸ்ட் கட்சியில் உறுதி யுடன் பணியாற்றியவர். வாலிபர் சங்கத்தின் நிர்வாகியாகவும், ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத் தறி உரிமையாளர்களை சங்கமாக அணி திரட்டி போராடுவதில் முக்கிய பங்காற்றினார். சாமளா புரம் பேரூராட்சி மன்ற உறுப்பினராக மூன்று முறை (1996, 2006, 2001 ஆண்டுகளில்).தேர்வு செய்யப்பட்டு திறம்பட மக்கள் பிரதிநிதியாக செயல்பட்டார். தியாகி குமரன் விசைத்தறி நெச வாளர் கூட்டுறவு சங்கத்தில் தலைவராக பொறுப்பு வகித்தார். காளிவேலம்பட்டி வீராசாமி: மார்க்சிஸ்ட் கட்சியின் உறுதி மிக்க ஊழிய ராக பணியாற்றியவர். கட்சி அறிவிக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் முன்னணி யில் நின்றவர். மக்களிடம் நெருங்கிய தொடர் பில் இயக்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டார். லட்சுமி மில் பால்ராஜ்
(சாரல் பால்ராஜ்):
திருப்பூர் ஆஷர் மில் தொழிலாளியாக வேலை செய்தவர். வாலிபர் சங்கத்தின் பொறுப்பில் இருந்தார். சிஐடியு பஞ்சாலை சங்க நிர்வாகக் கமிட்டி உறுப்பினராக இருந்தார். லட்சுமி மில் பகுதி கட்சி கிளைச் செயலாளர். தாலுகா குழு உறுப்பினராக செயல்பட்டார். கட்சியில் விசுவாசமிக்க ஊழியர். தேவராஜ்: லட்சுமி மில்லில் தொழிலாளியாக வேலை செய்தவர். சாலையோர வியாபாரிகளை அணிந் திரட்ட பாடுபட்டார். தாலுகா குழு உறுப்பி னர். கடைசி வரை கட்சி உறுப்பினராக உறுதி யோடு பணியாற்றியவர். கெங்காசாமி: லட்சுமி மில் கிளை கட்சி உறுப்பினர். வயது முதிர்ந்து மரணத்தை எதிர்நோக்கி இருந்த நிலையிலும், தான் கட்சிக்குத் தர வேண்டிய லெவி பணம் ரூ.100-ஐ மனைவியிடம் ஒப்படைத்து, கட்சியிடம் கொடுக்க சொல்லி விட்டு காலமானார். அம்மாபாளையம் முருகன்: மார்க்சிஸ்ட் கட்சியின் ராசா கவுண்டம்பாளை யம் கிளை உறுப்பினர். விசைத்தறி தொழி லாளர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டத்தின் போது உறுதியாக செயல்பட்டு தொழிலாளர்களை அணிதிரட்டியவர். ராசாகவுண்டம்பாளையம் சுப்பிரமணியம் (எல்ஐசி): விசைத்தறி தொழிலாளியாக வாழ்க்கை யைத் தொடக்கியவர். 1980 கால கட்டத்தில் இருந்தே கட்சியில் உறுப்பினராக இருந்தவர். அப்போதே வட்டார அளவில் முன்னணி ஊழி யராக செயல்பட்டவர். எழுத்தாளர், கவிதை வாசிப்பு ஆர்வம் கொண்டவர். அனைத்து இயக் கப் பணிகளிலும் முன்னணியில் செயல் பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் கடைசி வரை உறுப்பினராக நீடித்தவர். பல்லடம் ஆறுமுகம் (தேங்காய் கடை): பல்லடம் நகரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி கிளை செயலாளராக செயல்பட்டவர். இறுதி மூச்சு வரை கட்சியில் உணர்வோடு இருந்தார். தோழர்கள் கே.ரமணி, வெங்கடு, பூபதி, டி.பி.முத்துச்சாமி மற்றும் கே.எஸ்.கருப்பசாமி, என்.ஆறுமுகம் ஆகிய தோழர்கள் பல்லடம் வந்தால் இவர் வீட்டிற்கு வந்து செல்வார்கள். இந்த வட்டாரத்தில் உறுதி மிக்கத் தோழராக கட்சி வளர்ச்சிக்குப் பாடுபட்டார். வெட்டுப்பட்டான்குட்டை சுப்பிரமணியன்: ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப் பட்டது முதல் அதில் இணைந்து செயல்பட தொடங்கி இறுதிவரை கட்சி உறுப்பினராக இருந்தார். ஆரம்ப காலத்தில் பல்லடம் ஒன் றிய கமிட்டியிலும், வெட்டுப்பட்டான் குட்டை கிளை செயலாளராகவும் செயல்பட்டிருக்கிறார். ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்தாண்டு காலம் பணியாற்றினார். எவரடி சைசிங் மில் சிஐடியு தொழிலாளர் போராட் டத்தில் உறுதியுடன் செயல்பட்டவர். பல்லடம் வேலாயுதம்: கேரளாவின் நெம்மாரா பகுதியில் இருந்து வந்து தோழர் கே. ரமணியின் வழிகாட்டுதல்படி உடுமலைப்பேட்டையில் தங்கியிருந்து மார்க்சிஸ்ட் கட்சியில் பணியாற்றினார். பின் னர் பல்லடத்திற்கு வந்து இறுதிக் காலம் வரை கட்சி உறுப்பினராக செயல்பட்டார். மார்க் சிஸ்ட் கட்சி் பல்லடம் தாலுகா குழு உரு வானபோது முதல் தாலுகா குழு உறுப்பினராக செயல்பட்டவர். 63 வேலம்பாளையம் எம்ஜிஆர் எனும் நடராஜன்: வேலம்பாளையம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்களின் கூலி, போனஸ் போராட்டங்கள் உள்ளிட்டவற்றில் முன்னணி யில் இருந்து செயல்பட்டவர். பல்லடம் ஒன் றியக்குழு உறுப்பினராக இருந்தார். கடைசி வரை கட்சி உணர்வோடு உறுதியோடு செயல்பட்டவர். நடுவேலம்பாளையம் ஈஸ்வரமூர்த்தி: 1995ஆம் ஆண்டு விசைத்தறி போராட் டத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் இணைந்தார். விசைத்தறி தொழிலாளர் சங்கத்தில் நிர்வாகியாக செயல்பட்டார். கடைசி வரை கட்சி மீது விசுவாசத்துடன் உறுதியாக இருந்தவர். ஈ.தமிழரசு: பல்லடம் ஒன்றியம் முத்தாண்டிபளையம் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றுபட்ட கோவை மாவட்டத்திலும், கட்சியில் கோவை கிழக்கு மாவட்டம் பிரிக்கப்பட்டபோது அந்த மாவட்டத் திற்கும் விவசாய சங்க செயலாளராக செயல் பட்டவர். கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராக வும் இருந்தார். சின்னாம்பதி மலைவாழ் மக் கள், வனத்துறை காவல்துறையின் அடக்கு முறை சந்தித்த சம்பவத்தை வெளி உலகத் திற்கு கொண்டு வந்து நீதி பெற்று தந்ததில் முக்கிய பங்கு இவருக்குள்ளது. 63 வேலம்பாளையம் சுப்பிரமணியன்: வேலம்பாளையம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் முன்னணி தலை வராக பணியாற்றியவர் தொழிற்சங்க போராட் டத்தில் தீவிரமாக பாடுபட்டவர். மாதேஸ்வரன் நகர் முத்து: கோவை மாவட்டம் காரமடை பகுதியில் லாரி ஒர்க்ஷாப்பில் வேலை செய்தபோது சிஐடியு வில் தீவிரமாக பணியாற்றினார். ஒரு கட்டத்தில் பல்லடம் அருகே மாதேஸ்வரன் நகரில் குடி யேறி இங்கு மார்க்சிஸ்ட் கட்சி கிளையை உரு வாக்கி தீவிரமாக செயல்பட்டார். கட்சிக் கிளை செயலாளராகவும் இருந்து கடைசி வரை உணர்வுபூர்வமாக பாடுபட்டார்.
வெங்கிட்டாபுரம் நாகம நாயுடு (எ) தம்பண்ணன்: மார்க்சிஸ்ட் கட்சியின் மீது பற்றுறுதி மிக்க உறுப்பினர். மக்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர். வீட்டுமனைப் பட்டா, ரேசன் கார்டு உள்ளிட்ட தேவைகளுக்கு எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் இவரை நாடி வரு வார்கள். விண்ணப்பத்தை முறையாக எழுதி தேவையான சான்றுகளை இணைத்து இவரே நேரடியாக சைக்கிளில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்குச் சென்று கோரிக்கை களை நிறைவேற்றித் தர வைப்பார். ஆர்வமுள்ள வர்களைக் கண்டறிந்து கட்சியில் சேர்ப்பது டன், அவர்களை ஊழியர்களாக வளர்த்தெடுக் கவும் உதவுவார். கடைசி வரை கட்சி உறுப் பினராக இருந்தார். சென்னிமலைபாளையம் சுப்பிரமணியம்: தனது பகுதியில் இளைஞர்களை அணி திரட்டி வாலிபர் சங்கத்தை ஏற்படுத்தி செயல் பட்டார். வாலிபர் சங்க பல்லடம் கமிட்டி உறுப் பினராகவும், சென்னிலைபாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக வும் தீவிரமாக செயல்பட்டவர். உணர்வுப் பூர்வமாக கடைசி வரை இயக்கத்தை நேசித்து வாழ்ந்தார். ஆலூத்துப்பாளையம் முத்துசாமி: அரசுப் போக்குவரத்துத் தொழிலாளியாக பல்லடம் கிளையில் வேலை செய்தவர். தொழி லாளர் பிரச்சனையில் முன்னணியில் நின்று போராடியவர். தொழிற்சங்க நிர்வாகியாகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றியக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். இறுதி வரை தொழிலாளி வர்க்க உணர்வுடன் கம்யூ னிஸ்ட்டாக இருந்து மறைந்தார்.