tamilnadu

பத்துகாணி மலைவாழ் மக்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

பத்துகாணி மலைவாழ் மக்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

குமரி மாவட்டம் பத்துகாணி மலைவாழ் மக்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார். முள்ளாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு மக்களின் அவசர மருத்துவ பயன்பாட்டிற்காக 108 ஆம்புலன்ஸ் சேவையை துவக் கி வைத்தார். பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றபடி படிப்படியாக ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை உயர்த்தி தற்போது தமிழ்நாட்டிற்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் 1353 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் மொத்தம் 17,  108 ஆம்புலன்ஸ் அவசர ஊர்திகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 12 அடிப்படை உயிர் காக்கும் கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ்கள், நான்கு அதி நவீன உயிர்க்காக்கும் வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ்களும், ஒரு பச்சிளம் குழந்தைகளுக்கு உண்டான ஆம்புலன்சும்  இயக்கப்பட்டு வருகிறது.  கன்னியாகுமாரி மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் வருடம் 25279 பொதுமக்கள் ஆம்புலன்ஸ் சேவையால் பயன்பெற்றுள்ளார்கள். தற்போது கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்துக்குட்பட்ட  பத்துக்காணி ஆரம்ப  சுகாதார நிலையத்திற்கு மலைவாழ் மக்களின் அவசர தேவைக்காக  ஆம்புலன்ஸ் ஒன்று கூடுதலாக  அதிகரிக்கபட்டு,மார்ச் 29-ம் தேதி (சனிக்கிழமை) அன்று மலைவாழ் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கூடுதலாக இயக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸில் உயிர் காக்கும் அனைத்து மருத்துவ உபகரணங்கள் மருந்துகள் உள்ளன.  பத்துக்காணி ஆரம்ப சுகாதார நிலையத்தை  சுற்றியுள்ள  மலைவாழ் மக்கள் மிகவும் பயன் பெறுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.