tamilnadu

img

சிங்காரவேலர் நினைவு பயணக்குழுவிற்கு உளுந்தூர்பேட்டையில் வரவேற்பு

சிங்காரவேலர் நினைவு பயணக்குழுவிற்கு உளுந்தூர்பேட்டையில் வரவேற்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவு ஜோதி சென்னையில் இருந்து மதுரைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.வாலண்டினா, எஸ்.நம்புராஜன், எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான சுடர் பயணக் குழுவிற்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை விருத்தா சலம் சாலை மும்முனை சந்திப்பில் செந்தொண்டர் அணிவகுப்போடு ஆரவார வரவேற்பு அளிக்கப்பட்டது. உளுந்தூர்பேட்டை பேருந்து நிலை யத்தில் நகரச் செயலாளர் பி.ஸ்டாலின் தலைமையில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், செயற்குழு உறுப்பினர் எம்.கே.பழனி மாவட்டக் குழு உறுப்பினர்கள் வே.ஏழுமலை, டி.எஸ்.மோகன், ஆகியோர் பேசினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.ஆனந்தன், எம்.கே.பூவராகவன், டி.ஏழுமலை, எம்.செந்தில், இ.அலமேலு, ஜெ.ஜெயகுமார், வி.ரகுராமன், ஒன்றிய செயலாளர்கள் செ.சிவாஜி, கே.ஆனந்த ராஜ், வே.பாலகிருஷ்ணன், வை.பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.