ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட் சத்தை இழந்த தனியார் வங்கி உதவி மேலா ளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், பிடாரமங்கலம் ஊராட்சி, தேவர்மலை பகுதி யைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (33). இவ ருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ள னர். இவர், ஈரோடு மாவட்டம், முத்தூரில் உள்ள தனியார் வங்கி கிளையில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தார். ஆன் லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை அவர் இழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஜெயக்குமார் மனவேதனையில் காணப் பட்டுள்ளார். இந்நிலையில், நாமக்கல் மாவட் டம், மோகனூர் அருகே நெய்க்காரப்பட்டி பகுதியிலுள்ள தனது பாட்டி வீட்டிற்கு செவ் வாயன்று வந்துள்ளார். இதையடுத்து அவ் வழியாக சென்ற ரயில் முன் விழுந்து தற் கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த நாமக்கல் ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு, விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.