tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

உப்புத் தொட்டியில் மூழ்கி 2 தொழிலாளர்கள் பலி உரிய நிவாரணம் வழங்க சிஐடியு வலியுறுத்தல்

உடுமலைப்பேட்டை அருகே சடை யபாளையத்தில் செயல்பட்டு வரும் செயின்ட் ஜோசப் பப்பாளி பதப்படுத் தும் தொழிற்சாலையில் செவ்வாயன்று இரண்டு வடமாநில தொழிலாளர்கள் உப்புத் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரோகித் திகால் (23), அருண் கொமாங்கோ (22) ஆகிய இருவரும் பப்பாளி காய்களை உப்பு நீரில் ஊற வைக்கும் தொட்டியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, எதிர் பாராத விதமாக அருண் கொமாங்கோ தவறி விழுந்துள்ளார். அவரை காப் பாற்ற முயன்ற ரோகித் திகாலும் தொட்டி யில் விழுந்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு முதலுதவி சிகிச் சைக்கு முயற்சித்த போதும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடு மலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். சிஐடியு கண்டனம் இந்த துயரச் சம்பவம் குறித்து சிஐ டியு திருப்பூர் மாவட்ட துணைச் செயலா ளர் ஜெகதீசன் கூறுகையில், “தொழி லாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு தொழிற் சாலைகளை முறையாக ஆய்வு செய் யாததாலேயே இதுபோன்ற விபத்து கள் தொடர்கின்றன. தமிழக அரசும் தொழிலாளர் நலத்துறையும் உடனடி யாக தலையிட்டு, தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், அவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க  அரசு உதவ வேண்டும்” என்று வலியு றுத்தினார்.

முள்ளங்கி விளைச்சல் அதிகரிப்பு

தருமபுரி, ஏப்.2- தருமபுரி மாவட்டத்தில் முள்ளங்கி விளைச்சல் அதிக ரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், அன்னசாகரம், குண்டல்பட்டி, செம்மாண்டகுப்பம், சவுக்கு தோப்பு, நாய்க்கன் கெட்டாய், ஏ.முருக்கம்பட்டி, திப்பம்பட்டி, வன்னியகுளம், இண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்துள்ள னர். நல்ல மழை பெய்ததால் முள்ளங்கி செழித்து வளர்ந்து  தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. கடந்த இரண்டு மாதத் திற்கு முன்பு முள்ளங்கி வரத்து குறைந்து விலை அதிகரித்து,  கிலோ ரூ.20 வரையிலும் விற்பனையானது. ஆனால், தற் போது முள்ளங்கி விளைச்சல் மற்றும் வரத்து அதிகரித்துள் ளது. இதனால், விலை குறைந்து கிலோ ரூ.14க்கு விற்பனை யாகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் தற்போது அறுவடையை துவங்கி, மொத்த வியாபாரிகளிடம் முள்ளங்கியை விற்பனை செய்கிறோம். கடந்தாண்டு ஏக்கருக்கு 15 டன் அளவிற்கே மகசூல் கிடைத் தது. தற்போது, 25 டன் வரையிலும் மகசூல் கிடைத்துள் ளது. கிலோவுக்கு ரூ.15 வீதம் கிடைத்தால் மட்டுமே லாபகர மாக இருக்கும், என்றனர்.