திண்டுக்கல்லில் உற்சாக வரவேற்பு
சேலம் சிறைத் தியாகிகள் நினைவு ஜோதி
திண்டுக்கல்லில் சேலம் சிறை தியாகிகள் ஜோதி பயணத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. செவ்வாயன்று மாலை 4 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக திண்டுக்கல் மணிக்கூண்டில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு மாநகரச் செயலாளர் ஏ.அரபுமுகமது தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஆர்.சரத்குமார் வர வேற்றார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.கணேசன், டி.பாக்கியம், ஆகி யோர் முன்னிலை வகித்தனர். பயணக் குழுவிற்கு தலைமை வகித்த கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்களான பி.டில்லிபாபு, வி.அமிர்தலிங்கம், ஏ.குமார், ஜி.ராணி ஆகியோருக்கு சிறப்பான வர வேற்பு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. முத்துச்சாமி, மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் தேவி ஆகியோர் பங்கேற்றனர். போக்குவரத்து இடைக்கமிட்டி செயலாளர் ஜி.வெங்கிடுசாமி நன்றி கூறினார். பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செல்வராஜ் கலந்து கொண்டார். குஜிலியம்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் எல்.ஜெய பால் தலைமை வகித்தார். கோவிலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வேடசந்தூர் ஒன்றியச் செயலாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பி னர் சி.பாலச் சந்திரபோஸ், கலந்து கொண் டார். ஆத்தூர் ஒன்றியம் சின்னாளப்பட்டி யில் நடைபெற்ற ஒன்றியச் செயலாளர் சூசைமேரி தலைமை தாங்கினார். மூத்த தோழர் வி.கே.முருகன், மாவட்ட செய லாளர் கே.பிரபாகரன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் பி.ஆஸாத், டி. முத்துச்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் கே.ஆர்.கணேசன், ஆட்டோ சங்க மாவட் டத் தலைவர் ஆர்.பால்ராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பாண்டியராஜன், சென்ட்ராயன், மணிகண்டன், ரஜினி செல் வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்துள்ள சூரியம்பாளையம் பகுதியில் திங்களன்று சேலம் சிறை தியாகிகள் நினைவாக ஜோதி கொண்டு செல்லும் தியாகிகள் நினைவு ஜோதி பயணம் குழுவினருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. நிகழ்விற்கு, சிபிஎம் திருச்செங்கோட்டின் கட்சியின் மூத்த தலைவர் ஏ.ஆதிநாராயண தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்மணி, என்.கணேச பாண்டியன், நகர குழுச் செயலாளர் சீனிவாசன், கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.