tamilnadu

சுமங்கலி குடும்பத்தினர் மூலம் உதயமான சிபிஎம் அலுவலகம்

சுமங்கலி குடும்பத்தினர் மூலம் உதயமான சிபிஎம் அலுவலகம்

தொழிலாளி வர்க்கத்தின் கேந்திர நகர மான திருப்பூர் மாவட்டத்தில், மக்களின் உரிமைக் கான போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் தலை மையில் அணிவகுத்தவர்கள் ஆயிரமாயிரமாய் உள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய  மாநாடு தமிழகத்தில், மாமதுரையில் நடைபெற உள்ள நிலையில் இத்தகைய தோழர்களை நினைவு கூர்வது அவசியம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவினாசி ஒன் றிய குழு அலுவலகம் வாடகை கட்டிடத்தில் செயல் பட்டு வந்தது. இந்த நிலையில் அவிநாசி சுமங்கலி  ஜவுளி குடும்பத்தினரின் என்.நல்லசாமி- என்.பொன்னம்மாள் தம்பதியரின் வாரிசுகளான என். பாலன், என்.நடராஜன், என்.விஸ்வநாதன், என். சாந்தி உள்ளிட்டோர்களின் பூர்வீக சொத்தாக இருந்த இடத்தினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவினாசி ஒன்றிய தலைமை அலுவல கத்திற்கு தானமாக வழங்கினர்.  இதில் வாகன நிறுத்துவதற்கு ஏதுவாக இல் லாத காரணத்தால், இந்த இடத்தை விற்பனை செய்து அவிநாசி செல்லாண்டியம்மன் கோவில் வீதியில் புதிதாக இடம் வாங்கினர். இந்த இடம்  வாங்குவதற்கும் பொருள் உதவி வழங்கினர். அது மட்டுமின்றி, இவர்கள் தொடர்புள்ள பல்வேறு மாநிலங்களின் ஜவுளி  உற்பத்தியாளர்களிடம் நிதி பெற்றுக் கொடுத்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்ட அரங்கத்தில் நல்ல சாமி நினைவரங்கம் என்று பெயர் சூட்டப் பட்டது. இவர்களின் தந்தை என்.நல்லுசாமி ஒன்று பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக செயல் பட்டவர். இந்த இடத்தை என்.பொன்னம்மாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள்  மாநில செயற்குழு உறுப்பினர் ரமணி பெயரில்  பதிவு செய்து வழங்கினார். இதற்கான ஆவ ணத்தை அன்றைய கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என்.வரதராசனிடம் வழங்கப்பட்டது. முன்னாள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தங்கவேல், அவிநாசி முன்னாள் தாலுகா செயலாளர் பி.முத்துசாமி, பழங்கரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.பழ னிச்சாமி ஆகியோர் உடனிருந்தனர். கல்கத்தா பெரியசாமி திருப்பூர் பகுதியில் ஆரம்ப கட்ட பனியன்  தொழிற்சங்க தலைவராகவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பிரதேச கமிட்டி உறுப்பினராக வும், தீக்கதிர் விநியோகஸ்தராகவும் பணியாற்றி னார். கருவம்பாளையம் உள்ளிட்ட மேற்கு  ஏரியாவில் கட்சியை வலுவாக கட்ட அடித்தளமிட்ட வர். மரணம் வரை கருவம்பாளையம் கட்சி உறுப் பினராக செயல்பட்டார்.  என்.வேலுச்சாமி ஆரம்ப கட்டத்தில் தொழிற்சங்க தலைவராக வும், மேற்கு ஏரியாவில் கட்சி,  தொழிற்சங்க செயல் பாடுகளுக்கு ஊக்கம் அளித்தார். எந்த பணியாக இருந்தாலும் செலவுகள் பற்றி தயங்காமல் உறுதியாக செய்திடுவார். கருவம்பாளையம் பகுதியில் கட்சி அலுவலகங்கள் கட்டுவதில் மிகப்பெரிய பங்காற்றினார். வேலுச்சாமி அண்ணன் என்றும் பழகுவதற்கு எளிமையான தோழராக விளங்கினார். மரணம் வரை கேவிஆர் நகர் கட்சி உறுப்பினராக செயல்பட்டார்.  கே.ஆர்.கோவிந்தசாமி மேற்கு ஏரியா பகுதியிலும் கருவம்பாளையம் பகுதியிலும் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தில்  இருந்தும், பனியன் தொழிலாளர் சங்கத்திலும் பணியாற்றினார். கே ஆர் ஜி என்று அனைவராலும்  அன்போடு அழைக்கப்பட்டவர். தலைவர்கள், தோழர்கள் தலைமறைவு வாழ்க்கையின்போது அவர்களுக்கு இடமளித்து பராமரித்தவர்.  மணிக்குமார் கலை இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், கலைக் குழுக்களை வழி நடத்திய வர். தென்னம்பாளையம் பகுதியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் தொழிற்சங்கப்  பணியிலும், தமுஎகசவிலும் உறுதியாக பணி யாற்றியவர். கறாராக பணிகளை செய்யக்கூடிய தோழர். மரணம் வரை தென்னம்பாளையம் கட்சி உறுப்பினராக செயல்பட்டார்.

தெருநாய்கள் கடித்து மான் உயிரிழப்பு

தருமபுரி, ஏப்.1– தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள மொரப்பூர் காப்புக்காடு வனப்பகுதியிலிருந்து விலங்குகள் உணவு மற்றும்  தண்ணீர் தேடி, அருகிலுள்ள கிராமங்களுக்கு வருவது  வழக்கம். இந்நிலையில், திங் களன்று அதிகாலை மொரப் பூர் காப்புக்காட்டிலிருந்து 2  வயது மதிக்கத்தக்க ஆண்  புள்ளிமான் ஒன்று, காடு செட்டிபட்டி கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகு திக்கு தண்ணீர் தேடி வந் தது. அப்போது, தெருநாய் கள் துரத்தி சென்று கடித்து குதறியதில் புள்ளி மான் பரி தாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவலறிந்த பாலக் கோடு வனச்சரக அலுவலர் நடராஜ், வன மருத்துவர் மற்றும் வன காவலர்கள், சம்பவ இடத்திற்கு வந்து, புள்ளிமானை பிரேத பரி சோதனை செய்து அடக்கம் செய்தனர்.