வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
திருப்பூர், மார்ச் 30- திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தின் 2025 ஆம் ஆண்டுக்கான நிர்வாகக்குழு தேர்தல் வெள்ளியன்று நடைபெற்றது. முன்னதாக, உச்சநீதிமன்றம் மன்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில், தமிழ் நாடு பார்கவுன்சிலால் ‘ஒரு பார் ஒரு வாக்கு’ என்ற அடிப் படையில் தேர்தல் நடைபெற்றது. முடிவில், சங்கத்தின் தலை வராக ஓ.உதயசூரியன், துணைத்தலைவராக ஏ.டி.சத்திய மூர்த்தி ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். செயலா ளராக ப.விஜய் ஆனந்த், பொருளாளராக டி.முத்துலட்சுமி, இணைச்செயலாளராக வி.நந்தகுமார், நிர்வாகக்குழு உறுப் பினர்களாக கே.ராஜகோபால், டி.மகாலட்சுமி, ஆர்.பிரபாக ரன், ஆர்.செல்வம், ஆர்.விகாஸ், ஜி.ஹரி புருஷோத்தமன் ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.
ரேசன் அரிசி கடத்தல் கும்பலுக்கு துணை போன விற்பனையாளர் இடமாற்றம்
சேலம், மார்ச் 30 – சேலம் மாநகரம், சாமிநாதபுரம், மருதநாயகம் தெரு வில் உள்ள ரேசன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தவர், அரிசி கடத்தல் கும்பலுக்கு துணை போனதாக எழுந்த புகாரையடுத்து, அவர் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். சாமிநாதபுரம் அருகே உள்ள ரேசன் கடையில் வெண் ணிலா என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் பொறுப்பேற்றது முதல் கடைக்கு வரும் பொதுமக்களை தகாத வார்த்தையால் திட்டுவது, மிரட்டுவது போன்ற செயல் களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நிர்வாகி சதீஷ் என்பவரை செல்போனில் அழைத்த வெண்ணிலா, அவரை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பான காட்சிகள் இணை யத்தில் வைரலாகியது. மேலும், சாமிநாதபுரம், பள்ளப்பட்டி பகுதியில் செயல் படும் 20க்கும் மேற்பட்ட ரேசன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள், ரேசன் அரிசி கடத்தல் கும்பலுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்படுவதாகவும், ரேசன் பொருட்கள் அனைத்தும் எடை குறைவாக வழங்கு வதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து ரேசன் கடை விற்பனையாளர் வெண் ணிலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் எச்சரிக்கை தட்டி வைக்கப்பட்டது. மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், வெண்ணிலா-வை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ள