புதுப்பாளையம் ஊராட்சியை இரண்டாகப் பிரிக்க கோரிக்கை
அவிநாசி, மார்ச் 30 - திருப்பூர் மாவட்டம் அவி நாசி அருகே உள்ள புதுப் பாளையம் ஊராட்சியை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வஞ்சிபாளையம் பகுதி கிளைகள் சார்பில் சனியன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. வருவாய் பதிவு அடிப் படையில் இரண்டு கிராம அலு வலர்கள் செயல்பட்டு வரும் நிலையில், குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் பெருகி வருவதால் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பொதுமக்கள் 8 கிலோ மீட்டர் தூரம் வரவேண்டிய சூழல் உள்ளது. இதனால் ஊராட்சி தொடர்பான ஆவணங்கள் பெறுவதில் சிரமம் ஏற் படுவதாகவும் உடனடியாக ஊராட்சியை இரண்டாகப் பிரிக்க வேண்டும், மேலும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட குடிநீர் இணைப் புகள் குறித்து தகவல் அறி யும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு 568 இணைப்புகள் வழங்கப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. ஆனால் முன்னாள் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு செய்துள்ளது. எனவே இது குறித்து விசா ரணை மேற்கொண்டு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இந்த கிராம சபை கூட்டத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலா ளர்கள் ஹனிபா, குமரவேல், வாலிபர் சங்க செயலாளர் அருள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.