சிபிஎம் அகில இந்திய மாநாட்டு செந்தொண்டர் அணிவகுப்பு ஒத்திகை
மதுரையில் ஏப்ரல் 6 ஆம்தேதி நடை பெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க உள்ள செந்தொண்டர் அணியின் கோவை பிரிவு அணியின் செந்தொண்டர் அணிவகுப்பு ஞாயிறன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெற உள்ளது. மாநாட் டில் செந்தொண்டர்கள் பங்கேற்கும் அணி வகுப்பு நடைபெற உள்ளது. செந்தொண்டர் பேரணிக்கான பயிற்சி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. அதன்ஒருபகுதியாக கோவை மாவட்டத் தில் ஞாயிறன்று அவிநாசி சாலை அண்ணா சிலை அருகே உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் ஐநூறுக்கும் மேற்பட் டோர் பங்கேற்ற செந்தொண்டர் ஒத்திகை அணிவகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலை வரும், முன்னாள் கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சச்சி தானந்தம், மாவட்டச் செயலாளர் சி.பத்ம நாபன் ஆகியோர் பங்கேற்று செந்தொண் டர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு உரையாற்றினர். முன்னதாக செந் தொண்டர் அமைப்பின் நோக்கம் குறித்து, திருப்பூர் மிலிட்டரி பொன்னுசாமி உரை யாற்றினார். இதைத்தொடர்ந்து மக்கள் ஒற்றுமையை பாதுகாப்போம், உழைப்பவர் உரிமையை பாதுகாப்போம், மதவெறி சக்திகளை விரட் டியடிப்போம் என்கிற உறுதிமொழியை, செந் தொண்டர் பேரணி ஒருங்கிணைப்பாளர் வி. தெய்வேந்திரன் வாசிக்க, செந்தொண்டர்கள் இந்த உறுதியை ஏற்றனர். இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.