tamilnadu

img

தொடரும் நாய்களால் ஆடுகள் உயிரிழக்கும் சோகம்

தொடரும் நாய்களால் ஆடுகள் உயிரிழக்கும் சோகம்

ஊத்துக்குளி அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறியதில், 12 ஆடுகள் உயிரிழந்தன. திருப்பூர் மாவட்டம், ஊத்துக் குளி வட்டம், சர்க்கார் கத்தாங் கன்னி கிராமம் வெங்கலப்பாளை யம், விரியன்கிணற்றுதோட்டம் பகு தியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் தனது தோட்டத்தில் அமைத் திருந்த பட்டியில் அடைக்கப்பட்டி ருந்த 12 செம்மறி ஆடுகளை சனி யன்று வெறிநாய்கள் கடித்துக் கொன்று விட்டது. 20க்கும் மேற் பட்ட ஆடுகள் படுகாயமடைந் துள்ளது. இறந்த ஆடுகளின் மதிப்பு  ரூ.1.5 லட்சத்துக்கு மேல் இருக்கும்.  இதுகுறித்த தகவலறிந்த தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்கு நர் புகழேந்தி, கிராம நிர்வாக அலுவ லர், கால்நடை மருத்துவர், விவசா யிகள் சங்க நிர்வாகிகள் உயிரி ழந்த ஆடுகளை பார்வையிட்ட னர். இதுகுறித்து ஆர்.குமார் கூறு கையில், ஊத்துக்குளி, சென்னி மலை, காங்கேயம் பகுதிகளில் தெரு நாய்களால் ஆடுகள் உயிரி ழப்பது தொடர்கிறது. விவசாயிக ளின் தொடர் போராட்டதினால் அரசு  தற்போது இழப்பீடு அறிவித்துள் ளது. அது அரசாணையாக மாறி  விவசாயிகளுக்கு நிவாரணமாக கிடைப்பதற்கு இன்னும் சில நாட் கள் ஆகும். இழப்பீடு கொடுத்தா லும் விவசாயக் குடும்ப வாழ்விற்கு ஆதாரமாக இருக்கும் ஆடுகளை இழப்பது கொடூரமானது. ஆடு களை கடித்து கொல்லும் தெரு  நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி  நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, பிராணி கள் நல சங்க கூட்டத்தில் இதற்கு உரிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொரு வட்டாரத் திற்கும் தெருநாய்கள் காப்பகம் ஒன்றை ஏற்படுத்தி அரசு பரா மரிக்க வேண்டும், என்றார்.