tamilnadu

தமிழகம் வந்தடைந்த இலங்கை தமிழ்க் குடும்பம்

தமிழகம் வந்தடைந்த இலங்கை தமிழ்க் குடும்பம்

இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பத்தினர் திங்களன்று தமிழகம் வந்தடைந்தனர்.  இலங்கையின் வவுனியாவை பூர்வீகமாகக் கொண்ட பி.கலைசெல்வன் (37), பி.கிருபனா (33), பி.ஜிபின் (9), பி.ஷர்வின் (5) ஆகியோர் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு அருகில் உள்ள நான்காவது தீவில் வந்திறங்கினர். அவர்களை இந்தியக் கடலோரக் காவல் படையினர்  மீட்டு இராமேஸ்வரம் கடலோரக் காவல்படையினரிடம் ஒப்படைத்தனர்.  இந்தக் குடும்பத்தினர் திருவண்ணாமலையில் உள்ள செய்யாறு இலங்கைத் தமிழர் முகாமில் சிறிது காலம் தங்கியிருந்துள்ளனர். பின்னர் அவர்கள் 2019-ஆம் ஆண்டு இலங்கை சென்றனர்.  இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அவர்கள் மீண்டும் தமிழகம் வந்துள்ளனர். இதுவரை தமிழகம் வந்துள்ள இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்துள்ளது.