tamilnadu

img

சென்னையில் 10 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் தர்ணா

சென்னை, அக். 23 - சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே புதனன்று (அக்.23) மாற்றுத் திறனாளிகள் சுமார் 10 ஆயிரம் பேர் திரண்டு மாபெரும் தர்ணா போராட்டம் நடத்தினர். ஆந்திராவில் உள்ளது போல் மாதாந்திர உதவித்தொகையை 6 ஆயிரம் ரூபாயாகவும், கடும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்; அனைத்து உதவித் தொகைகளையும் மாற்றுத் திறனாளிகள் துறை மூலமாக மட்டுமே வழங்க வேண்டும்;விண்ணப்பித்து காத்திருக்கும் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும், 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உத வித்தொகை வழங்க ஆட்சியர் கள் தலைமையில் உள்ள வயது தளர்வு குழுவை கலைக்க வேண்டும்; வயது வரம்பின்றி  அனைவருக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும்; 100 நாள் வேலைத் திட்டத்தில் விண்ணப்பித்துள்ள அனைவரு க்கும் வேலை வழங்கவேண்டும்; 4 மணிநேர வேலை, இலகுவான வேலை, முழு ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும், உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, விண் ணப்பித்துள்ள அனைவருக்கும் ஏஏஒய் குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பெருந்திரள் தர்ணா நடை பெற்றது. இந்த போராட்டத்தை ஊன முற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் செயல் தலை வர் எஸ். நம்புராஜன் துவக்கி வைத்துப் பேசினார். மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தையும், அதன் தன்மைகளையும் விளக்கினார். மேலும், அகில இந்திய அளவில் மாற்றுத் திறனாளிகளின் கோரிக் கைகளுக்காக 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தில்லியில்பெரும் போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் கூறினார்.

சட்டமன்றத்தில் வலியுறுத்துவோம்

மாற்றுத் திறனாளிகளின் போராட்டத் தை ஆதரித்து, காங்கிரஸ் கட்சித் தலை வர் கு. செல்வப்பெருந்தகை பேசுகை யில், “இந்த போராட்டத்தின் கோரிக்கை களை நிறைவேற்ற சட்டமன்றத்தின் மழைக் கால கூட்டத்தொடரில் வலியுறுத்து வோம். பல துறைகளில் தேசத்தின் முதன்மை மாநிலமாக உள்ள தமிழ்நாடு, உதவித்தொகை வழங்குவதிலும் முதன்மை மாநிலமாக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மக்களவைத்தொகுதி உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் பேசுகை யில், “ஒன்றிய அரசு மாற்றுத் திற னாளிகள் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்பட வில்லை. பட்ஜெட்டில் ஒரு விழுக்காட்டி ற்கும் குறைவாகவே நிதி ஒதுக்கி உள்ளது. 2011ஆம் ஆண்டு மக்கள்  தொகை கணக்கெடுப்பில் 2.21 விழுக் காட்டினராக மாற்றுத் திறனாளிகள் இருந்தனர். இதனடிப்படையிலேயே திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்திராகாந்தி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 300 ரூபாய்தான் ஒன்றிய அரசு வழங்குகிறது. வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதை இடது சாரிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்து வோம். 2021 கணக்கெடுப்பு நடத்த இதுவரை நிதியைக் கூட ஒதுக்கவில்லை.  கணக்கெடுப்பு நடத்தினால், மாற்றுத் திற னாளிகளின் உண்மையான எண்ணிக்கை  வெளியே வரும். கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பதால் கணக்கெடுப்பு நடத்த மறுக்கின்றனர்” என்றார். “இந்தியாவின் ஜிடிபி-யில் தமிழ்நாட்டின் அளவு 8.8 விழுக்காடு. ஆந்திராவின் அளவு 4.78 விழுக்காடு. ஆனால் ஆந்திராவில் 6 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் என உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஜிடிபி அளவில் இரண்டாவது இடத்தில் உள்ள தமிழ்நாடு குறைவான உதவித்தொகை வழங்கு வது ஏற்புடையதல்ல. நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியின் வெற்றிக்காக உழைத்தவர்கள் மாற்றுத் திற னாளிகள். எனவே, மாநில அரசு மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை கடமை உணர்வோடு நிறைவேற்ற வேண்டும்” என்றும் சச்சிதானந்தம் வலியுறுத்தி னார். முன்னதாக, போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ. வில்சன், பொதுச்செயலாளர் பா. ஜான்சி ராணி ஆகியோர் தலைமை தாங்கினர். விசிக துணைப்பொதுச் செயலாளர் வன்னியரசு, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.எம். மூர்த்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, பொதுச்செயலாளர் அ. ராதிகா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகி ம. அந் தோணிசாமி, அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் துணைத்தலைவர் ஜி. ஆனந்தன், சங்கத்தின் மாநில பொரு ளாளர் கே.ஆர். சக்கரவர்த்தி, துணைத் தலைவர் ப.சு. பாரதி அண்ணா, மாநி லச் செயலாளர் ப. ஜீவா, எம். சரஸ்வதி