districts

img

கோவை மாநகராட்சியின் சொத்து வரி உயர்வுக்கு சிபிஎம், சிபிஐ மாமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு

கோவை, அக்.23- கோவை மாநகராட்சி கூட்டத் தில், சொத்து வரி உயர்விற்கு மார்க் சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.  கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் புதனன்று மேயர் கே.ரங்க நாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணை யர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் மற்றும் மண்டல தலைவர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், சிபிஎம், சிபிஐ, காங் கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் சொத்து வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரி வித்தனர், மேலும், உடனடியாக சொத்து வரியினை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், ஈசா யோகா மையத்தின் மூன்று எரியூட்டு மயானங்களுக்கு  அனுமதி கேட்டு விண்ணப்பித்துள் ளதை நிராகரிப்பதோடு எரியூட்டு மயானங்களுக்கு அனுமதி தரக் கூடாது என மார்க்சிஸ்ட் கட்சியினர் மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தி னர்.  முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சி யின் மாமன்ற குழுத்தலைவர் வி. இராமமூர்த்தி பேசுகையில், உடை யாம்பாளையம் முதல் சிஎம்எஸ்  பள்ளி வரை உள்ள பள்ள வாய்க்கால் கள் சீரமைக்க வேண்டும். சாந்தி நகரில் பிரதான வடிகால் மற்றும் தேவைப்படும் பகுதிகளில் கால் வாய்கள் மற்றும் மாநகரம் முழுவ தும் சாலைகள் மற்றும் மழை நீர் வடிகால்களை சீரமைத்திட வேண் டும். தெரு விளக்குகள் உள்ளிட்ட சிறு, சிறு வேலைகளுக்கு உடன டியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண் டும் என்றார், தொடர்ந்து, 24 ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஆர். பூபதி மற்றும் 13 ஆவது வார்டு சிபிஎம் உறுப்பினர் எம்.சுமதி ஆகி யோர் பேசுகையில், கோவை மாநக ராட்சியில் பழுதடைந்த நிலையில் உள்ள பூங்காக்களை போதிய  நிதி  ஒதுக்கீடு செய்து சீரமைக்க, வடக்கு மண்டலத்தில் மிகவும் சேதம டைந்துள்ள சுடுகாடுகளை உட னடியாக நிதி ஒதுக்கீடு செய்து சீர மைக்க வேண்டும், என்றனர்.