districts

20 சதம் போனஸ் கேட்டு நாளை காத்திருப்புப் போராட்டம்

நாமக்கல், அக்.23- 20 சதம் போனஸ் கேட்டு வெள்ளி யன்று (நாளை) காத்திருப்புப் போராட் டம் நடைபெற உள்ளதென, சிஐடியு விசைத்தறித் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபா ளையத்தில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறிக்கூடங்களில் 20 ஆயிரத் திற்கும் மேற்பட்ட ஆண், பெண்  தொழிலாளர்கள் பணியாற்றி வரு கின்றனர். ஒரு தறிப்பட்டறையில் 3  முதல் 25க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 8 மணி நேர வேலை முறை, இஎஸ்ஐ, பிஎப், பண்டிகைக் கால விடுமுறை, அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச கூலி, விசைத்தறிக் கூடத்தில் குடிநீர், கழிப்பிடம், முதலு தவி பெட்டி உள்ளிட்ட வசதிகளை விசைத்தறி உரிமையாளர்கள் அமல் படுத்துவதில்லை. மேலும், முன் பணம் என்ற பெயரில் லட்சக்கணக் கான ரூபாய் கடன் கொடுத்து, 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை  இரவு, பகல் என கொத்தடிமைகள் போல வேலை வாங்கப்படுகின்றனர். இதுஒருபுறமிருக்க, கடந்த பத்து  வருடங்களாக ஒன்பதரை சதம் போனஸ் மட்டுமே வழங்கப்பட்டு வரு கிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட விசைத்தறித் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று சிறப்பு பேரவை கூட்டம் நடத்தி, 20  சதவிகிதம் போனஸ் வழங்க வேண் டும் என வலியுறுத்தி மனு வழங்கு வது, 15 நாட்களுக்கு முன்பாகவே இந்த பணியில் தொடர்வது என தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசு அதிகாரிகளுக் கும், விசைத்தறி உரிமையாளர்க ளுக்கும் மனு அனுப்பப்பட்டுள்ள  நிலையில், இதுவரையிலும் போனஸ் பேச்சுவார்த்தைக்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும்  அரசு அதிகாரிகள் பேச்சுவார்த் தைக்கு அழைக்காத நிலை உள் ளது. எனவே, இதில் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி, வெள்ளியன்று (நாளை) பள்ளி பாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற உள்ளதென, சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.அசோகன் தெரிவித்துள்ளார்.