districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அரசு ஊழியர் சங்க மாநாடு

சேலம், அக்.23- அரசு ஊழியர் சங்கத்தின் மாநாடுகளில், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சேலம் நகர வட்டக் கிளை மாநாடு, அஸ்தம்பட்டி பகுதியிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலை வர் ந.திருவேரங்கன்,  சங்கத்தின் வட்டத் தலைவர் முருகப் பெருமாள் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர்கள் அர்த்தனாரி, ராணி, வட்டச் செயலாளர் ஸ்ரீபதி, பொருளாளர் சரவணன் உள்ளிட்டோர் உரையாற்றி னர். சங்கத்தின் சேலம் நகர வட்டக்கிளைத் தலைவராக வெங்கடேஷ், செயலாளராக ஸ்ரீபதி, பொருளாளராக ஆனந்தி  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ் நிறைவுரையாற்றினார். கோவை இதேபோன்று, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டக்கிளை மாநாடு மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலு வலகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. இம்மாநாட்டில், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஜெகநா தன், செயலாளர் செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பி னர் ரவி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர். இதனைத்தொடர்ந்து, மேட்டுப்பாளையம் வட்டக்கிளையின் தலைவராக வெள்ளிங்கிரி, செயலாளராக குணசேகரன், பொருளாளர் கவிதா உள்ளிட்ட 8 பேர் வட்டக்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

சேலத்தில் கனமழை: வெள்ளத்தில் மிதந்து சென்ற சடலம்

சேலம், அக்.23- சேலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், அடையாளம் தெரியாத நப ரின் சடலம் மிதந்த சென்றதால், பொதுமக் கள் அதிர்ச்சியடைந்தனர். கடந்த சில தினங்களாக தமிழ்நாடு முழு வதும் கனமழை பெய்து வருகிறது. அதன்படி,  சேலத்தில் செவ்வாயன்று காலை வெயில்  அடித்த நிலையில், மதியம் இரண்டு மணிய ளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாரல் மழை பரவலாக செய்தது. இதன்பின் பல இடங் களில் மழையின் தாக்கம் அதிகரித்து, கன மழையாக மாறியது. சேலம் சின்ன கடை  வீதி, பழைய பேருந்து நிலையம், அம்மா பேட்டை, குகை, கொண்டலாம்பட்டி, அரி யானூர், அம்மாபேட்டை, பொன்னம்மா பேட்டை, வீராணம், அணைமேடு உள்ளிட்ட  பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் இருந்து  மழைநீர், திருமணிமுத்தாறு ஆற்றில் சேர்ந்து  வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த  வெள்ள நீரில் அடையாளம் தெரியாத சடலம்  ஒன்று மிதந்து சென்றது. இதுகுறித்து தகவ லறிந்த சேலம் மாநகர காவல் துறையினர், வெள்ளத்தில் மிதந்து சென்ற உடலை மீட் கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது  வெள்ள நீரின் வேகம் அதிகமாக இருந்த தால் உடலை மீட்க முடியவில்லை. உடல் எங்கு ஒதுங்குகிறது? என்பதை அறிய நாமக் கல், கரூர் மாவட்ட காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வரு கிறது.

கடனை செலுத்திய பின்னரும் நகையை வழங்க மறுப்பு வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

நாமக்கல், அக்.23- கடனை திரும்ப செலுத்திய பின்னரும், அடகு வைத்த தங்க நகையை வழங்க மறுத்த வங்கி, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண் டும் என நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் - மோகனூர் சாலை, ராக்கி நக ரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த செந்தில்முரு கன் (44), செல்வி (61), குமரேசன் (41) ஆகி யோர் வசித்து வருகின்றனர். கடந்த 2018 ஆம்  ஆண்டு ஜூலை மாதம், மோகனூர் சாலையி லுள்ள கனரா வங்கியில் 236 கிராம் தங்க நகை களை அடமானம் வைத்து ரூ.4,94,000யை செந்தில்முருகன் கடனாக பெற்றுள்ளார். இதைப்போலவே, 76 கிராம் தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.1,00,000யை செல்வி யும், 269 கிராம் நகைகளை அடமானம் வைத்து  ரூ.16,30,000யை குமரேசனும் கடனாக பெற் றுள்ளனர். மூவரும் கடனையும், வட்டியை யும் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வங்கியில் செலுத்தியுள்ளனர். மூவ ருக்கும் வங்கியில் வேறு கடன்கள் இருப்ப தாகக்கூறி, நகைக்கடன் தொகையை செலுத் திய பின்பு, மூவருக்கும் அடமானம் வைக்கப் பட்ட நகைகளை வழங்க வங்கி நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மூவரும் தனித்தனியாக கடந்த ஜனவரி மாதத் தில் வங்கியின் மீது நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய் தனர். மூவரும் பெற்ற வேறு கடன்கள் வரா  கடன்களாக உள்ளதால், அவற்றை செலுத்தி னால் மட்டுமே அடமானம் வைத்த நகை களை திரும்ப வழங்க முடியும் என்று வங்கி யின் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வீ.ராம ராஜ், உறுப்பினர்கள் ஆர்.ரமோலா, என். லட்சுமணன் ஆகியோர் அடங்கிய அமர்வு  புதனன்று தீர்ப்பு வழங்கியது. அதில், நகை  கடன்களை வழங்கும் போது வாடிக்கையாள ருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வேறு  கடன்கள் நிலுவையில் இருந்தால், நகை  கடனை திருப்பி செலுத்தினாலும் நகைகள்  திரும்ப வழங்கப்படாது என்ற நிபந்தனை உள்ளதா? என்பதை அறிய கடன் ஒப்பந்தத் தின் நகல்களை வங்கி தாக்கல் செய்ய வில்லை. கடன் தொகை முழுவதும் செலுத் திய பின்னரும் அடமானம் வைத்த நகை களை நுகர்வோர்களுக்கு வழங்காதது சேவை குறைபாடாகும். இதனால், வழக்கு தாக்கல் செய்தவர்கள் அடமானம் வைத்த நகைகளை 30 நாட்களுக்குள் வங்கி நிர்வா கம் வழங்க வேண்டும். மேலும், வழக்கு தாக் கல் செய்துள்ள ஒவ்வொரு நுகர்வோருக்கும் தலா ரூ.ஒரு லட்சத்தை இழப்பீடாக, கடனை திருப்பி செலுத்திய நாளிலிருந்து பணம் வழங்கப்படும் நாள் வரை, ஆண்டுக்கு 9 சத விகித வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் வருமான வரித்துறை சோதனை

கோவை, அக்.23- கோவையில் மூன்று இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோத னையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் புத னன்று பல்வேறு மாவட்டங்க ளில் வருமான வரித்துறை  அதிகாரிகள் தொழில் நிறுவ னங்கள் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்ட னர். அதன்ஒருபகுதியாக கோவையிலும் மூன்று இடங் களில் வருமானவரித்துறை சோதனையானது நடைபெற் றது. அதன்படி சிவானந்தா காலனியில் செயல்பட்டு வரும் ஆதித்யா அஸ்வின் பேப்பர் பிரைவேட் லிமிடெட்  நிறுவனம், சிங்காநல்லூர் சென்ட்ரல் ஸ்டுடியோ சாலை யில் வசித்து வரும் புல் (Bull) நிறுவனத்தின் உரிமையாளர் பொன்னுதுரை என்பவரின் இல்லம், உப்பிலிபாளையம் ராமானுஜம் நகரில் வசித்து வரும் லஷ்மி டூல்ஸ் உரிமை யாளர் வரதராசன் என்பவ ரது இல்லம் ஆகிய இடங்க ளில் வருமான வரித்துறை யினர் சோதனை மேற்கொண் டனர்.

திருமூர்த்திமலையில் ஊராட்சி ஒன்றிய சொத்துகளை தளி பேரூராட்சிக்கு மாற்ற எதிர்ப்பு

உடுமலை,அக்.23 - திருமூர்த்திமலையில் இருக்கும் நீச் சல்குளம், சுற்றுலா மாளிகை மற்றும்  சிறுவர் பூங்கா உள்ளிட்ட ஊராட்சி ஒன் றிய சொத்துகளை தளி பேரூராட்சி நிர் வாகத்திற்கு மாற்ற ஊராட்சி ஒன்றிய  உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இவை அனைத்தும் தொடர்ந்து ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாடில் தான் இருக்க வேண்டும் என்று அவர் கள் வலியுறுத்தினர். உடுமலை ஊராட்சி ஒன்றிய உறுப்பி னர்கள் கூட்டம் 22ஆம் தேதி செவ்வா யன்று உடுமலை அலுவலகத்தில் ஒன்றி யத் தலைவர் மகாலட்சுமி முருகன் தலை மையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் திருமூர்த்தி மலை யில் உடுமலை ஊராட்சி ஒன்றிய நிர்வா கத்தின் கட்டுபாட்டில் இருக்கும் சொத்து களை தளி பேராட்சி நிர்வாக்திற்கு மாற்ற  வேண்டும் என்ற கோரிக்கைக்கு அனைத்து உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவை அனைத் தையும் தொடர்த்து ஊராட்சி நிர்வாகமே  பராமரிக்க வேண்டும் என்றும் தெரி வித்தனர்.  மேலும் தற்பொழுது செயல்படும் ஊராட்சி ஒன்றிய அலுலகத்தை இடித்து  அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டும்  வரை அலுவலகத்தை தற்காலிகமாக வேறு இடத்தில் மாற்றவும், எரிசனம் பட்டி மற்றும் எலையமுத்தூர் பகுதியில்  புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வும், மேலும் ஊராட்சி பகுதிகளில் புதிய  குடிநீர், சாலைகள் மற்றும் சாக்கடை களை அமைக்க முடிவு செய்யப்பட் டது. மேலும் கூட்டதில் அலுவலக செலவி னம் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங் கள் குறித்த 26 தீர்மானங்கள் நிறை வேற்றபட்டன. இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுருநாதன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து  கொண்டார்கள்.

திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத மாநகராட்சியாக திருப்பூரை அறிவிக்க நடவடிக்கை

திருப்பூர், அக். 23 – திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத மாநகராட்சி என திருப்பூரை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் (பொ) சுல்தானா தெரிவித்துள்ளார். திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகள்,  நான்கு மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. இதன் மொத்தப் பரப்பரளவு  159.35 சதுர கிலோ மீட்டர். தற்போது தோராயமாக 13 லட்சத்து 99 ஆயிரம் மக் கள்தொகை உள்ளது.  பிரதமரின் தூய்மை இந்தியா திட் டத்தின் கீழ், தனிநபர் கழிப்பிடம் கட்டும்  திட்டத்தில் திருப்பூர் மாநகராட்சிப் பகுதி யில் 6047 கழிவறைகள் கட்டப்பட்டுள் ளன. மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு களிலும் மொத்தமுள்ள 2லட்சத்து 86 ஆயிரத்து 386 குடியிருப்புகளில், கழிப்பி டம் கட்ட இட வசதி இல்லாதவர்களுக் காக, மாநகராட்சி மூலம் கட்டப்பட் டுள்ள 205 நவீன கழிப்பிடங்களை பயன் படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  மேலும், இம்மாநகராட்சிக்குட் பட்ட அனைத்து பகுதிகளிலும் திறந்த வெளியில் மலம் கழித்தல் பகுதிகள் ஏது மில்லை என மாமன்றம் தீர்மானம் நிறை வேற்ற உள்ளது. எனவே திருப்பூர் மாந கராட்சி பகுதியில் திறந்தவெளியில் மலம், சிறுநீர் கழித்தல், மலத்தினை நேர டியாக வடிகாலில் விடுவது ஆகியவை  இல்லாத மாநகராட்சியாக அறி விக்கை செய்து சான்று பெற நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. எனவே, பொது மக்கள் அனைவரும் தங்களின் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துகளை இந்த அறிவிப்பு கண்ட  15 நாட்களுக்குள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு மாநகராட்சி ஆணையாளர் (பொ) சுல் தானா கேட்டுக் கொண்டுள்ளனர்.

நீரில் மூழ்கிய காய்கறி தோட்டங்கள் 

உதகை, அக்.23- எம்.பாலாடா சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழைக்கு பல ஏக்கர் மலை காய் கறி தோட்டம் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.  வடகிழக்கு பருவ மழை எதிரொலியாக நீலகிரி முழுவதும் பரவலாக மழை  பெய்து வருகிறது.  மழையால் காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் கடுங்  குளிர் நிலவுகிறது. இந்நிலையில், செவ்வாயன்று காலை முதல் வானம் மேக  மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாவட்டத்தில் ஆங்காங்கே இடியுடன்  கனமழை பெய்தது. உதகை அருகே எம்.பாலாடா . கல்லக் கொரை ஹாடா  பகுதிகளில் ஒரு மணி நேரம்  கனமழை பெய்தது. கன மழைக்கு நீரோடை  பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் மழை நீர் மலை காய்கறி தோட்டங் களை சூழ்ந்தது. அப்பகுதியில் பயிரிடப்பட்ட கேரட், முட்டை கோஸ், பீட்ரூட்,  உருளை கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறிகள் நீரில் மூழ்கின.  இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எம். பாலாடா உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால்,பல ஏக்கரில் பயிரிடப்பட்ட மலை  காய்கறிகள் நீரில் மூழ்கின. இதனால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட் டுள்ளது. தோட்டக்கலைத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு உரிய நிவாரண  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  என்றனர்.

தொடர் மழையால் மேற்கு மாவட்ட அணைகள் நிரம்பி வருகிறது

ஈரோடு, அக். 23- தொடர் மழையின் காரணமாக மேற்கு மாவட்டங்களில் உள்ள பவானி, ஆழியார் உள்ளிட்ட அணை கள் நிரம்பி வருகிறது.  ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட் களாக தொடர் மழை பொழிவு இருந் தது. சனியன்று பவானிசாகர் அணை  பகுதியில் மட்டும் 6.4 மி.மீ ஆக மழைப் பொழிவு இருந்தது. ஞாயிறன்று மாவட் டம் முழுவதும் 201.30 மி.மீ மழை பதி வானது.  இந்நிலையில், பவானி சாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க் கால், அரக்கன்கோட்டை தடப்பள்ளி வாய்க்காலில் பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் படிப்படியாகக் குறைக்கப்பட்டது. செவ்வாயன்று காலை குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீரும், அரக்கன்கோட்டை-தடப் பள்ளி கால்வாயில் திறக்கப்படட தண் ணீரும் நிறுத்தப்பட்டது.  ஆழியார் அணையின் நீர்மட்டம் உயர்வு ஆழியார் கவியருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக தற்காலிகமாக ஆழியார் கவியருவி மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது. இந்நிலை யில், 120 அடி கொள்ளளவு கொண்ட  ஆழியார் அணையின் நீர்மட்டம் தற் போது உயர்ந்து 119.10 அடியாக உள்ளது. மார்லிமந்து அணையின் நீர்மட்டம் உயர்வு நீலகிரி மாவட்டம், உதகை நக ராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணை விளங்கி வரு கிறது. இதற்கு அடுத்தபடியாக மார்லி மந்து, டைகர்ஹில், கோரிசோலை, கீழ்கோடப்பமந்து, மேல் கோடப்ப மந்து உள்ளிட்ட அணைகள் நிரம்பி வருகின்றன.  இந்த அணைகளில் இருந்து பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய் யப்பட்டு வருகிறது. உதகை நக ராட்சியின் 3,4 ஆவது வார்டுகளை உள்ளடக்கிய வண்டிச்சோலை, சர்ச்ஹில், மார்லிமந்து மற்றும் அதன்  சுற்றியுள்ளப் பகுதிகளுக்கு மார்லி மந்து அணையில் இருந்து குடிநீர் விநி யோகம் செய்யப்படுகிறது.  இதேபோல், உதகை நகராட்சியின்  குடிநீர் ஆதாரங்களான பார்சன்ஸ் வேலி அணை, டைகர்ஹில் உள்ளிட்ட  அணைகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. மார்லிமந்து அணையி லும் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள் ளது. அணையின் மொத்த கொள்ள வான 23 அடியில் தற்போது 20 அடி  வரை நீர் இருப்பு உள்ளது. உதகை சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து நாள்தோறும் மழை பெய்து வரும்  நிலையிலும், அணையை ஒட்டியுள்ள  வனப்பகுதிகளில் உள்ள நீரோடைக ளில் இருந்து வரக் கூடிய நீரும் அணை யில் சேருவதால் நீர்மட்டம் கணிச மாக உயர்ந்து வருகிறது.