8 எம்.பி. தொகுதிகளைக் குறைக்க மோடி அரசு சூழ்ச்சி!
தமிழகத்தில் 8 மக்களவைத் தொகுதிகளைக் குறைக்கும் சூழ்ச்சி யில் ஒன்றிய பாஜக அரசு இறங்கி யிருக்கும் நிலையில், அதனை முறியடிக்கும் திட்டங்களை வகுப்பதற்காக, மார்ச் 5 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப் படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்திற்கு, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப் பட்டுள்ள 40 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சரவைக் கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது. தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி இந்தக் கூட்டத்திற்குப் பின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “இன்றைக்கு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கியமான ஒரு முடிவை எடுத் திருக்கின்றோம்; அதற்காகத்தான் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப் படுகிறது”. “தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில், தென்னிந்தியாவின் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்கு கிறது; 2026-ஆம் ஆண்டு மக்கள வைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய ஒன்றிய அரசு தீர்மானித் திருக்கிறது; மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், இவற்றைக் குறைக்கும் அபாயம் எழுந்துள்ளது” என்றார். தமிழ்நாட்டின் குரலை நசுக்க முயற்சி “நாடு முழுவதும் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி களைப் பிரித்தால் தமிழ்நாட்டில் 8 மக்களவைத் தொகுதிகளை இழக்கும் சூழல் ஏற்படும். அப்படி தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழ்நாட்டுக்கு 39 எம்.பி.க்கள் இருக்கமாட்டார்கள். 31 எம்.பி.க்கள் தான் இருப்பார்கள். நாட்டில் ஒட்டு மொத்த எம்.பி.க்கள் எண்ணிக் கையை உயர்த்தி அதற்கு ஏற்ப பிரித் தாலும் தமிழ்நாட்டுக்கு இழப்பு ஏற்படும். நமக்கான பிரதிநிதித்துவம்
‘அதிமுகவும் குரல் கொடுக்கும் என நம்புகிறேன்’
செய்தியாளர்களின் பல்வேறு கேள்வி களுக்கும் முதலமைச்சர் பதில் அளித்தார். அப்போது, மும்மொழிக் கொள்கை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு, “மும்மொழி பிரச்சனை, நீட் தேர்வு விலக்கு, தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத பிரச்சனை குறித்தும் தீர்வு காண வேண்டும் என்றால் தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். அப்போது தான் குரல் கொடுக்க முடியும். அதனை எல்லாம் அடிப்படையாக வைத்துத்தான் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. எனினும் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்து விவாதிப்பதுதான் முக்கியத்துவம்” என்று பதிலளித்தார். “தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஏன் ஒற்றுமை இல்லை?” என்ற கேள்விக்கு, பதிலளிக்கை யில், “அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுகவும் பங்கேற்பார்கள். இதிலாவது குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.
மார்ச் 5 - அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு
குறைந்து விடும். அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்க ளுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதனால் தமிழ் நாட்டின் குரல் நசுக்கப்படும். இது உறுப்பினர் எண்ணிக்கையை மட்டும் குறித்த கவலை அல்ல. மாநிலத்தின் உரிமையை சார்ந்தது என்பதை மறந்து விடக் கூடாது” என்றும் அவர் கூறினார்.
மக்கள் தொகையை குறைத்ததற்கு தண்டனையா?
மேலும், “மக்கள் தொகை யைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்தியாவின் இலக்கு. அந்த இலக்கில் தமிழ்நாடு வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 10 ஆண்டு களாக குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் வெற்றிகரமாக நிறை வேற்றப்பட்டுள்ளது. பெண் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட முன் முயற்சிகள் மூலம் தமிழ்நாட்டில் சாதித்திருக்கின்றோம். இந்நிலையில், தமிழ்நாட்டில் மக்கள் தொகை குறைந்ததையே காரணமாகக் காட்டி, மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் முதன்மையாக இருக்கும் தமிழ்நாடு, தொகுதி மறுசீரமைப்பு மூலம் கடுமை யாக பாதிக்கப்பட உள்ளது; இதன் காரணமாக, தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட் டத்தை நடத்த வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது” என்றும் முதலமைச்சர் தெரி வித்தார்.
தனிப்பட்ட அரசியலை கடந்து கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்
எனவே, “தமிழ்நாடு எதிர் கொள்ளவிருக்கிற சில முக்கிய மான பிரச்சனைகளில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலை வர்கள் ஒன்றிணைந்து முடிவு எடுக்க வேண்டும்” என்று கூறிய முதல்வர், “அதற்காக மார்ச் 5 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஆலோசனை மேற் கொள்ளப்படும்” என்றும்; “அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கும் 40 கட்சிகளை அழைக்க முடிவு செய்து உள்ளோம். அவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட உள்ளது; அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியலை கடந்து இந்த விவா தத்தில் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என செய்தி யாளர்கள் மூலம் கேட்டுக் கொள்கின்றேன்” என்றார்.