tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆர்பிஐ-க்கு கண்டனம்

சென்னை: பொதுமக்கள் அவசரகால பண தேவைக்கு வங்கிகளில் நகைக் கடன் பெறுவது இன்றியமையாதது. ஏழை-எளிய மக்கள் மற்றும் வேளாண் தொழில் செய்யும் உழவர்கள் தங்கள் தேவைக்கு நகைக் கடனையே பெரி தும் நம்பியுள்ளனர். இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால் வங்கியில் நகைக் கடன் வாங்குபவர்களில் பலர் தற்போது கவலை யில் உள்ளனர். எனவே, ஒன்றிய நிதித்துறை அமைச்சகம், புதிய வழிகாட்டுதல் உத்தரவை திரும்பப் பெற்று, பழைய விதி முறைகளையே வங்கிகள் பின்பற்ற வழி செய்ய வேண்டும்  என்று வைகோ தெரிவித்துள்ளார்.

மசூதிகளுக்கு 7,920 மெ.டன் பச்சரிசி

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிக்கும் முஸ்லிம் மக்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரித்து வழங்கும் பொருட்டு, பள்ளி வாசல்களுக்கு பச்சரிசி, தமிழக அரசால் வழங்கப்பட்டு வரு கிறது. அதன்படி 2025 ஆம் ஆண்டு, கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக, பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக் கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 7,920 மெட்ரிக் டன்  அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்க  முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சீமானுக்கு சம்மன்

சென்னை: நீதிமன்ற உத்தரவையடுத்து, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், முதல்கட்டமாக பிப்.27 அன்று நேரில் ஆஜரா கும்படி வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பி  உள்ளனர்.  

அடிமேல் அடி வாங்கும் சீமான்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பாவேந்தன் அக் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ‘தந்தை  பெரியாரின் கொள்கை ஓங்குக’ எனும் பெயரில் அறிக்கை  வெளியிட்டுள்ள அவர், கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் தொடர்ந்து பெரியார் குறித்து அவதூறாக பேசி  வருகிறார்; முன்னுக்குப் பின் முரணாக தொண்டர்களை அர வணைக்காமல் செயல்படுகிறார் என்றும் தெரிவித்திருக் கிறார். அந்த கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து  விலகி வருவதால் சீமான் மேலும் ஆவேசமடைந்துள்ளார்.

ரூ.194.57 கோடிக்கு விற்பனை!

சென்னை: சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வண்ணம், கண்காட்சிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், துணை முதல்வரின் வழிகாட்டுதலின்படி, இணைய வழி விற்பனையில் அமேசான், பிளிப்கார்ட், மீஷோ, இந்தியா மார்ட், ஜியோ மார்ட், பூம், ஜேஇஎம் போன்ற இ-வர்த்தக முன்னணி நிறுவனங்களின் தளங்களில் இதுவரை 4,235 பொருட்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது வரை ரூ.194.57 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனை  செய்யப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாரியம் விளக்கம்

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைமை அலுவலக பசுமை எரிசக்தி பிரிவில் செவ்வாயன்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். டிடிஎஸ் வரிப்பிடித்தம் செய்ததில் குளறுபடி நடந்ததாக வந்த புகாரையடுத்து இந்த  சோதனை நடந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலை யில், “வருமான வரித்துறை சோதனை நடக்கவில்லை. வாரியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விதமான  செலவினங்களில் உரிய வருமான வரி பிடித்தம் தொடர்பாக வழக்கமான சரிபார்ப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை. வருமான வரி சோதனை என்ற செய்தி தவறானது” என தமிழ்நாடு மின்சார  வாரியம் விளக்கம் அளித்துள்ளது.