சென்னையில் 65 பேருக்கு தீக்காயம்! பட்டாசு வெடித்தபோது சோகம்
சென்னை, அக்.21- சென்னையில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட தீக்காயத்திற்காக 65 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், 47 பேர் வீடு திரும்பிய நிலையில், 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீபாவளி பண்டிகையை நேற்று (அக்.20) நாடு முழுவதும் பட்டாசு வெடித்தும், இனிப்பு களை பகிர்ந்தும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி னர். அந்த வகையில் சென்னையில் உள்ள மக்களும் தீபாவளியை கோ லாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், சென்னை மாநகரின் பாது காப்பு கருதி குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். பாது காப்பான மற்றும் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டன. இந்த நிலையில், பட்டாசு வெடித்து தீக்கா யம் அடைந்த 30 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். அதில், 18 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 9 சிறுவர்கள், 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 12 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, ராயப் பேட்டை அரசு மருத்துவ மனையில் 30 பேர் அனு மதிக்கப்பட்டனர். அதில் 24 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கிண்டி கருணாநிதி நூற்றாண்டு மருத்துவ மனையில் 5 பேர் அனு மதிக்கப்பட்ட நிலையில், அனைவரும் வீடு திரும்பி யுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. வழக்குப்பதிவு தீபாவளி பண்டிகையின் போது, 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கடந்த 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில் எந்த இரண்டு மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பதை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், சென்னை மாநகரின் நலன் கருதி காலை 1 மணி நேரம் மற்றும் மாலை 1 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தர விட்டது. இதனால் அரசு விதித்த கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த நபர்கள் மீது, கடந்த 5 ஆண்டுகளாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்றும் அரசு விதித்த 2 மணி நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 319 வழக்குகளை பெரு நகர சென்னை காவல் துறை யினர் பதிவு செய்துள்ளனர்.