தமிழகம் முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள்
தமிழகம் முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டு உள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழகத்தின் 39 மாவட்டங்களில் முதல்கட்டமாக கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும், தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் என மொத்தம் 1000 மருந்தகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திங்களன்று திறந்து வைத்துள்ளார். பிற மருந்தகங்களை ஒப்பிடும்போது முதல்வர் மருந்தகத்தில், மருந்துகளின் விலை 75 சதவீதம் வரை குறைந்த விலையில் வழங்கப் பட உள்ளது. இதன் மூலம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினரின் மருத்துவச் செலவிற்கான சுமை பெரிய அளவில் குறையும். அத்தோடு பி.பார்ம், டி.பார்ம் படித்துள்ள மாணவர்களும், தொழில் முனைவோர்களும் இந்த திட்டத்தில் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. இம்மருந்த கங்களில் உயிர் காக்கும் மருந்துகள் அனைத்தும் குறைந்த விலையில் கிடைப் பதை படிப்படியாக தமிழக அரசு உறுதி செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மக்கள் நலனில் அக்கறை கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற் குழு பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.