tamilnadu

img

நாளொன்றுக்கு 11 பாலியல் வல்லுறவு குற்றங்கள்.... பாஜக ஆளும் உ.பி.யில் அதிகரித்த சிறுமிகள் மீதான வன்கொடுமை

லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் கடந்த சிலநாட்களாக சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது அம்மாநில மக்களிடையே பெரும் அச் சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் லஷ்மிப்பூர் கேரியில்தலித் தொழிலாளி ஒருவரின் 13 வயதுமகள் கடந்த வெள்ளிக்கிழமை இரவுதிடீரென காணாமல் போனார். அந்தசிறுமியை அவர்களது பெற்றோர் ஊர் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.இந்நிலையில், அடுத்த நாள்காலை 5 மணியளவில் அப்பகுதியில்உள்ள செங்கல் சூளையில் சிறுமிமயக்கமடைந்த நிலையில் இருந் ததை கண்டுபிடித்தனர். இதில் சிறுமிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, உடலில் சிகரெட்டால் சூடுவைக் கப்பட்டு துன்புறுத்தப்பட்டு இருந் தது தெரியவந்தது. 

காவல்துறையினர் விசாரணை நடத்தி, அப்பகுதியைச் சேர்ந்த 2 பேரை, ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.இதேபோல் ஹப்பூரில் 6 வயது தலித் சிறுமி ஒருவர் ஆகஸ்ட் 6-ஆம்தேதி அவரது வீட்டின் அருகிலேயேகடத்தப்பட்டு பாலியல் வன் முறைக்கு உள்ளாக்கப்பட்டார். அதன்பின்பு அவர் ரத்த காயங்களுடன் புதர் ஒன்றில் தூக்கி வீசப்பட் டார். அந்த சிறுமியின் உறுப்பில் மிகவும் மோசமான காயங்கள் ஏற் படுத்தப்பட்டு இருந்தன. மீரட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்தச்சிறுமிக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடேயே, புலந்தசகர் மாவட்டத்திலுள்ள குர்ஜா எனும் பகுதியில்ஆகஸ்ட் 5 அன்று 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் முயற்சி நடந்துள்ளது. சிறுமி அப்போது குரல் எழுப்ப முயன்றதால், மர்ம நபர்கள் சிறுமியின் குரல்வளையை நெரித்து படுகொலை செய்தனர். சிறுமியின் உடல் கரும்பு தோட்டம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.இவ்வாறு பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில், அடுத்தடுத்து சிறுமிகள் கடத்தப்படுவதும், பாலியல்வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே “உத்தரபிரதேசத் தில் மிகவும் குறைவான குற்றங் களே நடக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் குற்றங்களின் எண் ணிக்கை குறைந்துள்ளது. சட்டம் - ஒழுங்கு முன்பு இருந்ததை விட நல்ல நிலையில் உள்ளது” என்று சாமியார் முதல்வரான ஆதித்யநாத் பேட்டி அளித்திருப்பது மக்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிராக நாடுமுழுவதும் பதிவாகும் குற்றங்களில் 15.8 சதவிகிதம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் பதிவாகின்றன என்றும், இங்க நாளொன்றுக்கு 11 முதல் 12 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்றும்ஏற்கெனவே புள்ளி விவரங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.