tamilnadu

img

தென் அமெரிக்கக் கண்டத்திலும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது...

ரியோ 
கொரோனா வைரஸ் எழுச்சி பெற்ற காலத்திலிருந்து கடந்த வாரம் வரை ஆசியா, ஐரோப்பா வட அமெரிக்கா ஆகிய மூன்று கண்டங்களில் மட்டுமே கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. ஆப்பிரிக்கா, ஓசியானியா, தென் அமெரிக்கா கண்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தது. அதாவது கொரோனா பரவல் அவ்வளவாக இல்லை. 

ஆனால் தற்பொழுது தென் அமெரிக்கா கண்டத்திலும் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் உள்ளது. அங்குப் பிரேசில், சிலி, ஈக்வடார், பெரு, கொலம்பியா ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதில் அதிக சேதாரத்தைச் சந்தித்த நாடுகள் பிரேசில் மற்றும் பெரு தான். பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 59 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதேபோல பெருவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை அங்கு 700 ஆக உள்ளது. இதுவரை தென் அமெரிக்கா கண்டத்தில் மொத்தமாக 1 லட்சத்து 31 ஆயிரம் பேர் கொரோனவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.