tamilnadu

img

ஆப்பிரிக்க கண்டத்தில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்... 

டர்பன் 
கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் உலகில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளை மிரட்டி வருகிறது. உலகில் உள்ள 6 கண்டங்களில் ஆசியா, ஐரோப்பா, வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய 4 கண்டங்களில் கொரோனா வைரஸ் தனது ஆட்டத்தை குறைக்காமல் இன்று வரை ருத்ரதாண்டவமாடி வருகிறது. 

இந்த 4 கண்டங்களில் அதிகம் பாதிக்கப்பட்டது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா தான். வடஅமெரிக்காவில் பாதிப்பு 25 லட்சம் பேர், பலியானோர்களின் எண்ணிக்கை 1.49 லட்சம். அதேபோல ஐரோப்பாவில் மொத்த கொரோனா பாதிப்பு 22 லட்சம் ஆகும். பலி எண்ணிக்கை 1.84 லட்சம்.  ஆகும். ஆசியா மற்றும் தென் அமெரிக்காவில் பாதிப்பு 20 லட்சத்திற்குள் தான். 

ஆஸ்திரேலிய நாட்டை உள்ளடக்கிய ஓசியானியா கண்ட பகுதியில் உள்ள நாடுகளின் அசத்தலான நடவடிக்கையால் அங்கு கொரோனா பரவல் குறைந்துள்ளது. அதாவது பெரியளவு பாதிப்பில்லை. அக்கண்டத்தில் பெரும்பாலான நாடுகள் பச்சை மண்டலத்தை பெற்றுள்ளன.     

அதே போல ஆப்பிரிக்க கண்டத்தில் கொரோனா எழுச்சி பெற்ற காலத்தில் இருந்து மே மாத இறுதி வரை தென் ஆப்பிரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளில் மட்டும் கொரோனா தனது ஆட்டத்தை செயல்படுத்தியது. அதாவது ஆப்பிரிக்காவில் கொரோனா என்றால் எகிப்து, தென் ஆப்பிரிக்கா மட்டும் தான்.  தற்போது இந்த நிலையை மாற்றி கண்டம் முழுவதும் கொரோனா தனது ஆட்டத்தை கையிலெடுத்துள்ளது.    

தற்போது ஆப்பிரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் தினமும் பாதிப்பு, பலி எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக வளமிகுந்த தென் ஆப்பிரிக்கா கொரோனாவால் உருக்குலைந்து உள்ளது. அங்கு இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,600 பேர் பலியாகியுள்ளனர். தென் ஆப்பிரிக்காவிற்கு அடுத்து எகிப்து, நைஜீரியா, கானா, அல்ஜீரியா ஆகிய நாடுகள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளன. 

மற்ற கண்டத்தை போல ஆப்பிரிக்க கண்டத்தில் நவீன மருத்துவ வசதிகள் கிடையாது. இதனால் கொடூர குணமுடைய கொரோனா எந்த வேகத்தில் பரவும் அதை அக்கண்டத்தில் நாடுகள் எப்படி தடுக்கும், நோயாளிகளை காப்பாற்றும் என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.