tamilnadu

img

தனியார் பேருந்துகள் கட்டணக் கொள்ளை

கிருஷ்ணகிரி, மார்ச் 21- கொரானா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஞாயிறன்று (மார்ச் 22) மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் பேருந்துகள், ஆட்டோக்கள், ரயில்கள் ஓடாது என அறிவிக்கப்பட் டது. மேலும் கடைகளும், உணவு விடுதிகளும் மூடப்படும் என வணிகர் சங்கத் தலைவர்கள் அறி வித்துள்ளனர். இந்நிலையில், ஓசூர் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமையன்று (மார்ச் 21) மக்கள் கூட்டம் அதிக மாக காணப்பட்டது.  தொழிற் சாலைகளில் வேலை செய்யும்,தொழிலாளர்கள் தங்களின் ஊர்களுக்கு செல்ல பேருந்து நிலையத் தில் குவிந்தனர்.  மேலும் கிருஷ்ணகிரி,தருமபுரி, பெங்களூர் செல்லும் தமிழ் நாடு அரசுப் பேருந்துகள் குறைக்கப்பட்டிருந்தன. இதனைப் பயன்படுத்தி தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தாக கூறப்படுகிறது.