சென்னை
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு 5-ஆம் கட்ட ஊரடங்கு கடைபிடித்து வருகிறது. இந்த ஊரடங்கை ஊரடங்கு என்று சொல்வதா இல்லை தளர்வு என்று சொல்வதா என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ள நிலையில், நாளை முதல் தமிழகத்தில் தனியார் பேருந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் பேருந்துகள் சங்க செயலாளர் தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்," சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மண்டலங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்படும். இதற்காக 4400 பேருந்துகள் உள்ளன. சமூக இடைவெளி, பயணிகள் முகவசம் அணிவது தொடர்பான அரசின் விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்படும் எனவு ம் அறிவிக்கப்பட்டுள்ளது.