tamilnadu

நாளிதழின் கணக்கில் வெள்ளையான ரூ.10 கோடி: முஸ்லீம் லீக் மாவட்டச் செயலாளரிடம் விசாரணை

திருவனந்தபுரம், ஜூலை 13- முஸ்லீம் லீக்கின் அதிகார பூர்வ நாளிதழான ‘சந்திரி கா’-வின் வங்கி கணக்கில் ரூ.10 கோடிக்கான கறுப்பு பணம் வெள்ளையாக்கப் பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் இப்ராஹிம் குஞ்ஞியின் தனிச்செயலரும் முஸ்லீம் லீக் எர்ணாகுளம் மாவட்ட செயலாளருமான அஷ்ரப் மூப்பனிடம் அமலா க்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கொச்சியில் உள்ள அம லாக்கத்துறை அலுவலகத் தில் அஷ்ரப்பை வரவழைத்து நடத்திய விசாரணை ஆறு மணி நேரம் நீடித்தது. கள்ளப்பணம் வெள்ளை யாக்கியதற்கு எதிராக லீகின் மாவட்டக்குழுவின் ஒரு பிரிவினர் அக்கட்சியின் மாநில தலைமைக்கு அளித்த புகாரில் அஷ்ரப் மீதான குற்றச்சாட்டுகள் உள்ளன. கள்ளப்பணம் வெள்ளை யாக்கியதாக சுமத்தப் பட்டுள்ள வழக்கு தேவை யின்றி இட்டுக்கட்டியது என இவர் கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளார்.  சந்திரிகா நாளிதழின் தலைமை பொறுப்பில் இருப் பவர் இப்ராஹிம் குஞ்ஞி. பாலாரிவட்டம் மேம்பாலம் ஊழல் நடந்த காலத்தில் சந்திரிகாவின் வங்கி கணக்கில் கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றினார் என்பதே வழக்கு. இந்த வழக்கை திரும்ப பெற இப்ராஹிம் குஞ்ஞி முயற் சித்த வழக்கும் நிலுவையில் உள்ளது. பாலாரிவட்டம் ஊழல் வழக்கில் இப்ராஹிம் குஞ்ஞி ஐந்தாவதாவது குற்றவாளியாக இடம் பெற்றுள்ளார்.