திருவனந்தபுரம், ஜுன் 30- கோரள மாநிலம் நெட்டயத்தைச் சேர்ந்த தங்கச்சன் (76) என்பவர் மும்பையில் இருந்து மூன்று நாட்கள் முன்பு (ஜுன் 27) கேரளத்து க்கு வந்தார். உடல்நலம் குன்றிய நிலையில் பொது மருத்துவமனையில் அன்றைய தினமே அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் அன்றைய தினமே உயிரிழந்தார். அவர் உயிரிழந்தபிறகே பரிசோதனை முடிவுகள் தெரிய வந்தன. அதில் அவரு க்கு கோவிட் நோய் தொற்று உறுதியானது. கடுமையான நீரிழிவு உள்ளிட்ட கடுமை யான உடல் நலக்கோளாறுகள் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதோடு கேரளத்தில் கோவிட் மரணம் 24 ஆக அதிகரித்துள்ளது.