ஓணம் உலகம் முழுவதும் உள்ள மலையாளிகளின் தேசிய விழாவாகும். சமத்துவமும் சகோதரத்துவமும் நிலவிய முந்தைய காலங்களைக் குறித்த சிந்தனையே ஓணம் விழாவின் அடிப்படை. மக்களை நேசித்த மகாபலி என்ற சக்ரவர்த்தி கேரளத்தை ஆட்சி புரிந்தார் என்பதும், அதில் பொறாமை கொண்ட வாமனன் மகாபலியை வஞ்சனையினால் பாதாளத்திற்குள் மிதித்து தள்ளினார் என்பதும் ஓணம் பற்றிய செய்தியாகும்.
இன்றைய கொடிய கோவிட்-19 தொற்று நோய் காலத்தில் மக்கள் நலனை முன்னிறுத்தி மாநில அரசு அறிவுறுத்தியுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி ஓணம் விழாவைக் கொண்டாடுமாறு வேண்டுகிறேன். அனைவருக்கும் எனது மகிழ்ச்சி நிறைந்த ஓணம் நல்வாழ்த்துக்கள்.
கேரள மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
திருவனந்தபுரம்