tamilnadu

img

கேரளாவில் மேலும் 32 பேருக்கு கோவிட் 19 

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 32 பேருக்கு கோவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 17 பேர் பல்வேறு நாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். 15 பேருக்கு இவர்களுடன் ஏற்பட்ட தொடர்பின் மூலம் நோய் பரவியுள்ளது. தற்போது நோய் பாதிக்கப்பட்டவர்களில் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 17 பேரும்,  கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த 11 பேரும், வயநாடு மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 2 பேரும் உள்ளனர்.  இதன்மூலம் கேரளாவில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின்  எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,57,283 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,56, 660 பேர் வீடுகளிலும், 623 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். 6991 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் 6,034 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது.