tamilnadu

img

அதிகாரப் பசியால் மதச்சார்பற்ற அரசுகளை தகர்ப்பதே காங்கிரஸின் பாரம்பரியம்: கேரள முதல்வர் பேச்சு

திருவனந்தபுரம்:
அதிகாரத்திற்காக நாட்டில் மதச்சார்பற்ற அரசுகளை நசுக்கும் பாரம்பரியம் காங்கிரசுக்கு உள்ளது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். அதிகாரத்திற்கான இந்த பேராசை எல்.டி.எப் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வழிவகுத்தது என சட்டமன்றத்தில் திங்களன்று (ஆக.24) நடந்த நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்திற்கு பதிலளித்த முதல்வர் கூறினார்.    வி.பி.சிங்கின் மதச்சார்பற்ற அரசைபாஜகவுடன் நின்றுகொண்டு கவிழ்த் தது காங்கிரஸ் கட்சிதான். இதுதான் பாஜகவுக்கு வாய்ப்பு அளித்தது. இன்று, காங்கிரஸ் ஆட்சி ஒன்று அல்லது இரண்டு மாநிலங்களோடு சுருங்கிப் போனது. கேரளாவின் அடுத்த முக்கியஎதிர்க்கட்சியாக இருப்போம் என்கிற உறுதி காங்கிரசுக்கு இருக்கிறதா என்றும் முதல்வர் கேட்டார்.

இ.எம்.எஸ் அமைச்சரவையை காங் கிரஸ் அகற்றியபோது, அந்த அரசுக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை இருந் தது. அன்று மத்தியில் இருந்த அதிகாரத்தை பயன்படுத்தி அந்த அரசைதூக்கியெறிந்தது. இன்றும் குறுக்குவழியைத் தேடுகிறது. ஊடகங்களையும் சில முகவர்களையும் பயன்படுத்தி புகைமூட்டத்தை உருவாக்கி, அதன் மூலம் எழும் சந்தேகத்தின் பயனை பெற்று வருகிறது. உண்மை என்ற உணர்வைத் தரும் வரை மீண்டும் மீண்டும் பொய்யை கூறுகிறார்கள். இந்தநோக்கத்திற்காக நிகழ்வு மேலாண்மை குழுக்கள் (ஈவன்ட் மேனேஜ்மென்ட் டீம்) நியமிக்கப்படுகின்றன. அதிகார வெறி வரும்போது, மதச்சார்பின்மை உள்ளிட்ட மதிப்புகளைக்கூட காங்கிரஸ் மறந்துவிடுகிறது. அயோத்தியை ஒரு தரப்பிற்கு மட்டுமேதிறந்து கல் இடுவதையும் கர்சேவாவையும் அனுமதித்தது காங்கிரஸ் தான். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, செயலற்ற நிலையில் இருந்ததும் காங்கிரஸ்தான்.அவர்கள் பாஜகவின் பி அணியாகமாறினர். பாஜகவுடன் ஒட்டிக்கொள்வதில் காங்கிரசுக்கு தனி விருப்பம் உள் ளது. அதை விமர்சிப்பதற்கு பதிலாக, காங்கிரஸுடன் இணைந்திருக்க லீக் விரும்புகிறது. சாதி, மத, சமுதாய வேறுபாடற்ற பொது சமூகம் காங்கிரசின் மதச்சார்பின்மைக்கு எதிரான நிலைப் பாடுகளை புரிந்துகொள்ளும். 

அதிகார மோகம் காரணமாக கம்யூனிச எதிர்ப்பின் பரந்த தளம் அமைக்கப்படுகிறது. முஸ்லீம்லீக்கில்  ஜமாஅத்தேஇஸ்லாமியின் இஸ்லாமியமயமாக்கலும், காங்கிரஸ் கட்சி, ஆர்.எஸ்.எஸ்ஸின்  இந்துத்துவமயமாக்கலும் நடைபெறுகிறது. இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜனநாயக விரோதமேடையில் வருகிறார்கள். ஜமாத்-இ-இஸ்லாமி, ஆர்.எஸ்.எஸ் இயக்கங் கள் எல்.டி.எப் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஒன்றிணைகிறார்கள். சில ஊடகங்கள் தயாரிக்கும் பட்டு மெத்தையில் நம்பிக்கையில்லா தீர்மானம் என்கிற தூய்மையற்ற உறவு உள்ளது. எங்களுக்கு முக்கியமானது மக்கள்தான். அவர்களது நம்பிக்கையேமுக்கியமானது. நாங்கள் மக்கள் மத்தியிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்காகவே பணியாற்றுகிறோம். மக்களும் நாடும் எங்கள் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துவார்கள். நெறிகேடாக அவமதிக்க முற்படுபவர்களுக்கு மக்களிடமிருந்து சரியான பிரதிபலிப்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மீதியை நாம் மக்கள் மத்தியில் சென்று
பார்க்கலாம் என முதல்வர் பேசினார்.