tamilnadu

img

வெறுப்பு, வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட பாஜக எம்எல்ஏ பேஸ்புக்கிலிருந்து நீக்கம்... பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை

புதுதில்லி
வெறுப்புணர்வு, வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் டி.ராஜாசிங் என்பவரின் பேஸ்புக் பக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டு, அதில் மீண்டும் கணக்குதொடங்க முடியாதபடி நீக்கப்பட்டுள்ளார். 

இந்தியாவில் பாஜக தலைவர் களின் வெறுப்பு பேச்சுக்களை சமூகவலைத்தளமான பேஸ்புக் கண்டுகொள்வதில்லை, அத்தகையவர் களின் பதிவுகளை தணிக்கை செய்வதில்லை என்று அமெரிக்காவின் ‘தி வால் ஸ்ட்ரீட்’ பத்திரிகை கட்டுரை வெளியிட்டது. பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் இந்திய பேஸ்புக் நிர்வாகிகள் மீது அதன் நிறுவனர் மார்க் ஜூகர் பெர்க் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியது.இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்பத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு, பேஸ்புக்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. செப்டம்பர் 2 அன்று இரண்டரை மணி நேரம் பேஸ்புக் நிர்வாகிகள் காங்கிரஸ் மற்றும் பாஜக எம்பிக்கள் மூலம்விசாரிக்கப்பட்டனர். இந்நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் டி.ராஜா சிங் என்பவரின் பேஸ்புக் பதிவுகள் வன்முறையைத் தூண்டுகின்ற, மக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்கும் வகையில் உள்ளன என்று கூறி அவரது பேஸ்புக் பக்கத்திற்கு தடை விதித்துபேஸ்புக் நிறுவனம் உத்தரவிட்டுள் ளது. இவரின் பேஸ்புக் கணக்கு நீக்கப்பட்டுள்ளது. இனி இவர் பேஸ்புக்கில் கணக்குதொடங்க முடியாது. இன்ஸ்டாகிராமிலும் ராஜா சிங்கிற்கு தடை விதிக் கப்பட்டுள்ளது.