பாரத சாரணர் இயக்கம் - பரணிபார்க் சாரணர் மாவட்டம் மற்றும் வளர்ச்சி அறக்கட்டளை இணைந்து கரூர் வேலாயுதம்பாளையம் புகழி மலைக்கு ‘தமிழியை தேடி’ என்ற தலைப்பில் தமிழி கல்வெட்டு கள ஆய்வு மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு பயணம் மேற்கொண்டனர். புகழிமலை சமணர் குகையில் உள்ள 2000 ஆண்டு பழமையான ‘தமிழி’ கல்வெட்டுகளை முனைவர் ராமசுப்பிரமணியன் தலைமையில் கள ஆய்வு செய்யும் பரணிபார்க் சாரண ஆசிரியர்கள்.