tamilnadu

img

மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்பக் கோரி உண்ணாவிரதம்

கரூர், ஆக.29- காலியாகவுள்ள 700-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். மருந்தியல் அல்லாத நோயாளர் நல சங்க பணியிலிருந்து மருந்தாளுநர்களை விடுவித்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் கரூர் மண்டலத்தின் சார்பில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கரூர் மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, கரூர், கோவை மாநகர், கோவை புறநகர், திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டனர். போராட்டத்திற்கு கரூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மகாவிஷ்ணன் போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார்.  அனைத்து மருந்தாளுநர் சங்க மாநில தலைவர் எம்.சுப்பிரமணியன் சிறப்புரை யாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல், கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் பொன்ஜெயராம், வணிக வரி பணியாளர் சங்க மாவட்ட நிர்வாகி திருநாவுக்கரசு, பொதுப்பணித்துறை பொறியாளர் சங்க மாவட்ட நிர்வாகி செல்லமுத்து, ஆய்வக நுட்பநர் சங்க மாநிலச் செயலாளர் செல்வராணி ஆகியோர் வாழ்த்தி பேசினார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம்.சகாதேவன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். மாவட்ட செயலாளர் இளங்கோ நன்றி கூறினார்.