tamilnadu

img

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கல்

கரூர், மே 24- ஊதியம் இன்றி சிரமப்படும் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழி யர்களின் 15 குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி, ரூ 500 மதிப்பி லான மளிகைப் பொருட்கள், அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்யூதியர் சங்க திருச்சி மாவ ட்டக் குழு சார்பில் நிவாரணமாக வழங்கப்பட்டது.  அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்ட குழு அலுவலக கூட்ட ரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க திருச்சி மாவட்டச் செயலாளர் ஐ. ஜான்பாஷா தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் கரூர் மாவட்டத் தலைவர் தீபம்சங்கர், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சக்திவேல் ஆகியோர் நிவாரணப் பொருட் களை வழங்கி பேசினர். ஓய்வூதி யர் சங்க மாவட்ட நிர்வாகிகள் மனோகரன், நாகராஜ் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.